2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

வறியவர்களுக்கு வீடுகளை அமைத்துக்கொடுப்பதற்காக கன்னித்தன்மையை ஏலமிட்ட மாணவி

Kogilavani   / 2012 ஒக்டோபர் 25 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்துக்கொடுக்க வேண்டும் என்ற நல்லலெண்ண சேவைக்காக 20 வயது மாணவியொருவர் தனது கன்னித்தன்மையை 101,299,000 இலங்கை ரூபாவிற்கு (780,000 அமெரிக்க டொலர்) விற்பனை செய்ய முன்வந்துள்ளார்.

இதற்காக அம்மாணவி ஏலத்தொகையொன்றை இணையத்தளத்தில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கட்ரீனா என்றழைக்கப்படும் இம் மாணவி கல்வி நிறுவனமொன்றில் உடற்கல்வி கற்கை நெறியை தொடர்ந்து வருகிறார்.

தனது கன்னித்தன்மையை விற்று அதனூடாக பெறப்படும் பணத்தை வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்துக்கொடுப்பதற்காக பயன்படுத்தவுள்ளதாக இவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கட்ரீனாவின் செயற்பாடு உலகில் உள்ளவர்களை ஆத்திரத்தில் ஆழ்த்தியுள்ளது.  விபசாரிகளைவிட சற்று அதிகமாகவே இவர் நடந்துக்கொள்வதாக அநேகமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவரது இந்த செயற்படு 'கன்னித்தன்மையாளர்கள் தேவை'  என்ற பெயரில் அவுஸ்திரேலியாவில் ஆவணத்திரைப்படமாக உருவகவுள்ளமை மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

'இது ஒரு வியாபாரம், இந்த ஆவணப்படத்தினூடாக பயணங்களை மேற்கொள்வதற்கு ஒரு சந்தரப்பம் வாய்த்துள்ளது.

நான் காதல் உணர்வு அதிகமுடைய பெண், மற்றும் அன்பை நம்புகின்றேன். ஆனால், இந்த பயணமானது எனது வாழ்வில் வித்தியாசமிக்க பகுதியாக காணப்படுகின்றது' என அம் மாணவி ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இவரது கன்னித்தன்மைக்கு பலர் போட்டியிட்ட நிலையில் ஜப்பானைச் சேர்ந்த ஒருவரே இறுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0

  • JAN Thursday, 25 October 2012 11:02 AM

    2:175. அவர்கள்தாம் நேர்வழிக்கு பதிலாக வழிகேட்டையும்; மன்னிப்பிற்கு பதிலாக வேதனையையும் விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள். இவர்களை நரக நெருப்பைச் சகித்துக் கொள்ளச் செய்தது எது? --- அல் குர்ஆன்

    45:23. (நபியே!) எவன் தன்னுடைய (சரீர, மனோ) இச்சையைத் தன்னுடைய தெய்வமாக ஆக்கிக் கொண்டானோ, அவனை நீர் பார்த்தீரா? மேலும், அறிந்தே அல்லாஹ் அவனை வழிகேட்டில் விட்டு அவனுடைய காதுகள் மீதும் இருதயத்தின் மீதும் முத்திரையிட்டு; இன்னும், அவனுடைய பார்வை மீதும் திரையை அமைத்துவிட்டான். எனவே, அல்லாஹ்வுக்குப் பிறகு அவனுக்கு நேர்வழி காண்பிப்பவர் யார்? நீங்கள் சிந்தித்து உணர வேண்டாமா? -- அல் குர்ஆன்

    5:3. (இம்மையில் தம் விருப்பம் போல்) புசித்துக் கொண்டும், சுகம் அனுபவித்துக் கொண்டும் இருக்க அவர்களை விட்டு விடுவீராக; அவர்களுடைய வீணான ஆசைகள் (மறுமையிலிருந்தும்) அவர்களைப் பராக்காக்கி விட்டன; (இதன் பலனைப் பின்னர்) அவர்கள் நன்கறிந்து கொள்வார்கள்.-- அல் குர்ஆன் http://www.tamililquran.com

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .