2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

மனித வெருளி பொம்மையாக நிற்பதை தொழிலாக தேர்ந்தெடுத்த பட்டதாரி இளைஞன்

Kogilavani   / 2012 ஒக்டோபர் 08 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

தொழில் தேடி தோற்றுப்போன 22 வயது பட்டதாரி இளைஞர் ஒருவர் பண்ணையொன்றில்; மனித வெருளி பொம்மையாக தொழில்புரியும் நிலையை எதிர்கொண்ட சம்பவம் பிரிட்டனில் இடம்பெற்றுள்ளது.

தொழில் போட்டி மிகுந்த பிரிட்டன்; சூழலில் இசை மற்றும் ஆங்கில கற்கை நெறியை பெங்கோர் பல்கலைக்கழத்தில் மேற்கொண்டு வந்த ஜெமி பொக்ஸ் என்ற இளைஞனே இவ்வாறு மனித வெருளி பொம்மை தொழிலை தேர்ந்தெடுத்துள்ளார்.

மேற்படி கற்கை நெறிகள் அவர் தற்போது தேர்ந்தெடுத்துள்ள மனித வெருளி பொம்மைக்கு உபயோமற்ற ஒன்றாக மாறியுள்ளன.
தனது தொழில் நேரங்களில் சிலவற்றை பண்ணைக்கு வரும் கௌதாரிகளை விரட்டும் செயற்பாட்டிற்காக செலவிடும் இவர் அதிகமான நேரங்களை ஆடுதல், பாடுதல் விளையாடுதல், வாசித்தல் போன்ற செயற்பாடுகளுக்காக செலவிடுகின்றார்.

'நான் பல மணித்தியாலங்களை வாசிப்பில் செலவிடுவேன். ஆனால், எப்போது பண்ணையை நோக்கி கௌதாரிகள் வருகின்றதோ அவற்றை விரட்டுவதற்காக நான் எழும்ப வேண்டியிருக்கும்'   என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை 'நான் நீண்டகாலம் மனித வெருளி பொம்மையாக நிற்பதை விரும்பவில்லை. ஆனாலும், நான் எதிர்காலத்தில் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பதற்கான சந்தரப்பத்தை இந்த மனித வெருளி பொம்மை தொழில் வழங்குகின்றது' என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இத்தொழிலுக்காக அவர் வாரம் ஒன்றிக்கு இலங்கை ரூபா படி 51,071.8 பெற்றுக்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

'ஜெமி மிகச் சிறந்த தொழிலை செய்கின்றார், நாங்கள் கௌதாரிகளை துரத்துவதற்கு முயற்சிக்கின்றோம். ஆனால் அவை மீண்டும் மீண்டும் பண்ணையை நோக்கி வருகின்றன.' என பண்ணையாளர் வில்லியம் யங்ஸ் தெரிவித்துள்ளார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .