2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

அயர்லாந்து கடலை சுழல் சக்கரத்தின் மூலம் கடக்க முயலும் நபர்

Kogilavani   / 2012 செப்டெம்பர் 25 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


நபரொருவர் சுழலும் சக்கரத்தின் உதவியுடன் நடந்து  அயர்லாந்து கடலை கடப்பதற்கு முயற்சிக்கிறார்.

பிரிட்டனின் புரோஹமை பகுதியை சேர்ந்த கிறிஸ் டொட் எனும் 35 வயதான நபரே இவ்வாறு சுழலும் சக்கரத்தின் மூலம் 66 மைல் தூரத்தை கடக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

இக்கடலை இவ்வாறு கடப்பதற்கு இரு நாட்கள் தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரெடலோ என அழைக்கப்படும் மேற்படி கம்பி வலை சக்கரத்தில் தனது உடல் பலத்தை பிரயோகித்து இத்தகைய முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

இச் சக்கரத்தில் இருபுறங்களிலும் மிதவைகள் இணைக்கப்பட்டுள்ளன.

இச்சகாசப் பயணமானது மரதன் ஓட்டத்தை தொடர்ச்சியாக இருதடவை ஓடுவதைப் போன்று கடினமானதாகும் என பொறியியலாளரான கிறிஸ் டொட் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான பயணம் மூலம் ஆங்கிலக் கால்வாயை கடப்பதற்கே அவர் முதலில் திட்டமிட்டாராம். ஆனால் அதற்கு பலரிடம் அனுமதி பெறவேண்டிய நிலை, அதிக செலவு என்பவற்றை கருத்திற்கொண்டு, அயர்லாந்து கடலை கடப்பதற்கு அவர் தீர்மானித்துள்ளார்.

இதனூடாக கின்னஸ் சாதனையை நிலைநாட்ட வேண்டுமென எதிர்பார்க்கிறேன். ஏரியொன்றில் படகு ஓட்டும் நடவடிக்கையில் ஈடும்போது இவ்வாறான திட்டம் தோன்றியது.

இதற்கான ஏற்பாடுகளுக்காக அவர் கடந்த 11 மாதங்களை செலவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

'நான் ஏறி மற்றும் கடலில் ஒத்திகை செய்து பார்த்தேன். ஆனால் அந்த ஒத்திகை நடவடிக்கையானது ஓரிரு மணித்தியாலங்கள் மட்டுமே நீடித்தது. அந்த ஒத்திகைக்கும் சில நாட்கள் கடலில் நடப்பதற்கும் பாரிய வித்தியாசம் உள்ளது' என கிறிஸ் டொட் தெரிவித்துள்ளார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .