2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

சீனாவில் மீன்களுக்கான அழகுப்போட்டி

Kogilavani   / 2012 செப்டெம்பர் 18 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


உலகில் முதன் முதலாக கோல்ட் பிஷ் ரக மீன்களுக்கான அழகுப் போட்டி சீனாவில் நடத்தப்பட்டுள்ளது.
சீனாவின் புஸோ பகுதியில் நடத்தப்பட்ட  மேற்படி மீன்களுக்கான சர்வதேச அழகுப் போட்டியில் 14 நாடுகளைச் சேர்ந்த சுமார் 3000 மீன்கள் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.

மீன் வளர்ப்பாளர்கள் வௌ;வேறு தலைப்புகளின் கீழ் தமது மீன்களை இப்போட்டியில் பங்கேற்க செய்தனர்.

மேசைகளின் நீண்ட வரிசையில் காணப்பட்ட குவளைகளில் மேற்படி மீன்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

நீளமான மீன்கள், பாரம் கூடிய மீன்கள் போன்ற 12 பிரிவுகளின் கீழ் இந்த அலங்கார மீன்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டன.
'நாங்கள் பிரதானமாக 5 உள்ளடக்கங்களை கொண்டு உலகில் அழகிய தங்க மீனை தெரிவு செய்தோம். இனம், உடல் கட்டமைப்பு, நீந்தும் விதம், நிறம் மற்றும் ஒட்டுமொத்தமான ஈர்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில்  மீன்களை மதிப்பிட்டோம்' என இப்போட்டியின் நடுவர் குழாமைச் சேர்ந்த யே குய்சாங்; தெரிவித்துள்ளார்.

இவர், இப்போட்டியில் பங்குபற்றிய 1.75 கிலோகிராம் நிறையுடன் கோல்ட் பிஷ் மீது பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ளார்.

'நான் கடந்த 40, 50 வருடங்களாக கோல்ட் பிஷ்களை வளர்த்து வருகின்றேன். ஆனால் இப்படியொரு மீனை இன்றுதான் கண்டேன்'' என அவர்  தரிவித்துள்ளார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .