2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

பாதணிகளுக்கு அவசியமில்லாத காலுறைகள்

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 17 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாதணிகளை அணியாமல் காலுறைகளை மட்டும் அணிந்துகொண்டு நடப்பதற்கு ஏற்ற காலுறைகளை சுவிஸ் நிறுவனம் ஒன்று உருவாக்கியுள்ளது.

பாதணிகளுக்கு பதிலாக பயன்படுத்திக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இக் காலுறையானது வெறும் காலுடன் நடக்கும் உணர்வை ஏற்படுத்தும்.

கையுறைகளில் ஒவ்வொரு விரல்களுக்கும் தனியான பகுதிகள் காணப்படுவதைப் போல், கால்விரல்களை இயல்பான நிலையில் வைத்திருப்பதற்கு ஏற்ற வகையில் இக்காலுறை வடிவமைக்கப்பட்டுள்ளது.

வெறுங்காலுடன் மலையேற்றம் போன்ற செயற்பாடுகளில்  ஈடுபட விரும்புவர்களுக்கு  இந்த காலுறையை மிகவும் உதவும் என மேற்படி சுவிஸ் நிறுவனமானது நம்பிக்கைதெரிவித்துள்ளது.

பலவருடங்களாக தொழில்நுட்ப ரீதியிலான ஆய்வை மேற்கொண்டு இதை உருவாக்கியுள்ளேன் என மேற்படி சுவிஸ் பார்பூட் கம்பனியின் தலைவர் டையேட்டர் ஹேஸ்க் தெரிவித்துள்ளார்.

'இதனால் நான் இப்போது மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். சுவிஸ் பாதுகாப்பு காலுறையானது நவநாகரீமானதாக மாறலாம் என நான் கருதுகிறேன்' என அவர் கூறினார்.

மரதன் ஓட்டப்போட்டியில் பயன்படுத்தும் வகையிலான காலுறையை உருவாக்குவதற்கும் தற்போது  நாம்  முயன்றுவருகிறோம் என  அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .