2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

நிர்வாண நீச்சலில் உலக சாதனை

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 15 , பி.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரிட்டனின் ஒக்ஸ்போர்ட்ஷயர் ஏரியில் பெரும் எண்ணிக்கையானோர் ஒரே நேரத்தில் நிர்வாணமாக நீச்சலடித்து உலக சாதனையொன்றை படைத்துள்ளனர்.

இதில் பங்குபற்றியவர்கள் ஒருவருடனொருவர் முன் அறிமுகம் அற்றவர்களாவர். புதிய இரகசிய நீச்சல் கழகமொன்றின்  ஆரம்ப நிகழ்வின் ஒருபகுதியாக மேற்படி நிர்வாண நீச்சலும் இடம்பெற்றது.

இந்த அமைப்பானது ஒவ்வொரு மாதமும் இயற்கை அழகு நிறைந்த இடங்களில் நடத்தப்படும் நீச்சல் நிகழ்வுக்கு பலருக்கு அழைப்பு விடுத்து நீச்சல் நிகழ்வில் பங்கேற்பதற்கான வாய்ப்பை வழங்கி வருகின்றது.

ஆனால் இத்தகைய நீச்சல் நடைபெறும் இடங்கள் கடைசி நிமிடம் வரை இரகசியமாகவே வைக்கப்படும்
மேற்படி இரகசிய நீச்சல் அமைப்பின் அமைப்பாளரான பாபியன் ரிகலே இவ்வாறான திட்டத்தை முன்வைத்துள்ளார்.

சில நண்பர்களுடன் இரவு நேரத்தில் நீந்துவதற்கு சென்றால் அது மிகவும் அற்புதமான அனுபவமாக இருக்குமென 'எதிர்கால சினிமா மற்றும் இரகசிய நீச்சல்' எனும் அமைப்பின் ஸ்தாபகரான ரிகால் தெரிவித்துள்ளார்.

'உண்மையில் அது வேடிக்கையானது. எமது மக்கள் ஒவ்வொன்றையும் வித்தியாசமாக செய்வதற்கான வழிகளை ஆராய்கின்றனர் என நான் எண்ணுகிறேன்' என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0

  • படிக்காதவன் Wednesday, 15 August 2012 04:38 PM

    ச்சீ.. வெக்கம் கெட்டவனுகள்...

    Reply : 0       0

    saraa Thursday, 16 August 2012 09:19 AM

    இனி காட்ட என்ன‌ இருக்கிறது?

    Reply : 0       0

    smiruthy Tuesday, 28 August 2012 05:30 PM

    ஏன் இந்த கொல வெறி?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .