2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

உலகின் மிக குள்ளமான சிறுமி

Kogilavani   / 2012 ஜூலை 19 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


சீனாவைச் சேர்ந்த ஸியாவோஸியாவோ எனும் 3 வயதான சிறுமி உலகிலே மிகவும் உயரம்  குறைந்த சிறுமியாக விளங்குகிறார். ஒன்றரை அடி உயரத்துடன் இச்சிறுமி காணப்படுகிறாள்.

இச்சிறுமி புன்னகையுடன் குதூகலமாக காணப்படுகிறாள். மற்றச் சிறார்களுடன் கால்பந்தை உதைத்து விளையாடுகிறார். ஆனால் அவர்களுடன் ஒப்பிடுகையில் இச்சிறுமியின் உடல்நிலை ஆரோக்கியமாக இல்லை என்பது  புலனாகின்றது.

இச்சிறுமியே உலகில் மிகவும் குள்ளமான சிறுமி என நம்பப்படுகின்றது.

இச்சிறுமி பிறக்கும்போது 1.05 கிலோகிராம் நிறையுடனும் 33 சென்றிமீற்றர் உயரத்துடனுமே பிறந்தாள். ஆனால் தற்போது அவருக்கு மூன்று வயது, ஆனாலும் 54 சென்றிமீற்றர் மட்டுமே வளர்ச்சியடைந்துள்ளாள். அவளது தற்போதைய நிறை 2.5 கிலோகிராமாகும்.

இச்சிறுமியின்  வளர்ச்சி குறைவாகவுள்ளமைக்கு மரபியல் கோளாறுகளே  காரணமென சீனாவைச் சேர்ந்த வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

நீண்டகாலம் வைத்தியசாலையில் பராமரிக்கப்பட்ட இச்சிறுமி இவ்வாராம் வைத்தியசாலையிலிருந்து வீடு செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளாள்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .