2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

வீட்டுக் குளியலறைக்குள் 6 மாதங்களாக வசித்த பாம்பு

Kogilavani   / 2012 ஜூலை 18 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த ஆறு மாதங்களாக தனது குளியலறைக்குள் வசித்து வந்த பாம்பை பெண்ணொருவர் பொலிஸாரின் உதவியுடன் வனவிலங்கு பகுதிக்குள் விட்ட சம்பவம் சுவிட்சர்லாந்தில் இடம்பெற்றுள்ளது.

சட்டவிரோதமாக தொடர்மாடி குடியிருப்பு தொகுதியொன்றில் அடைத்து வைக்கப்பட்ட 7 மீற்றர் நீளமுடைய மேற்படி பாம்பானாது அங்கிருந்து ஜன்னலினூடாக தப்பிச்சென்று போயர் (வயது 28) என்ற பெண்ணின் வீட்டு குளியலறைக்குள் நுழைந்து கடந்த ஆறு மாதங்களாக வசித்து வந்துள்ளது.

28 வயதுடைய மேற்படி பெண், குளியலறைக்குள் செல்லும்போது குறித்த பாம்பு இருப்பதை கண்டு பொலிஸாருக்கு தகவலை வழங்கியுள்ளார். பொலிஸார் வந்து பார்த்தப்போது குறித்த பாம்பானது சுவரை ஒட்டி அமைந்துள்ள குழிக்குள் தலையை வெளியை நோக்கி காட்டியாவறு இருந்துள்ளது.

 'நான் குளியலறைக்குள் இருக்கும்போது அந்த பாம்பை பார்த்தவுடன் என்னை நான் சுதாகரித்துக்கொண்டேன். சட்டவிரோதமாக வளர்க்கப்பட்ட இந்தப் பாம்பு மீண்டு வனவிலங்கு பகுதிக்குள் விடப்படுவது மகிழ்ச்சியாய் உள்ளது' என போயர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .