2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

சிரிப்பு யோகா கழகத்துக்கு எதிராக வழக்கு

Kogilavani   / 2012 ஜூன் 25 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

தினமும் காலை 6 மணிக்கு சிரிப்பு யோகா பயிற்சியில் ஈடுபட்டு உரத்த சிரிப்பொலியை ஏற்படுத்துவதன் மூலம் அயலவர்களின் உறக்கத்தை குழப்புவதை நிறுத்திக்கொள்ளுமாறு யோகா நிலையமொன்றின் பயிற்சியாளர்களுக்கு மும்பை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தள்ளது.

குறித்த யோகா பயிற்சி நிலையத்திற்கு எதிராக 78 வயதுடைய விநாயக் செர்சட் (வயது 78) என்பவர் வழக்கு தாக்கல் செய்தததை தொடர்ந்து உயர் நீதிமன்றம் இவ் உத்தரவினை பிறப்பித்துள்ளது.

மேற்படி நிலையத்தில் சுமார் 30 பக்தர்கள் ஒன்றிணைந்து ஒவ்வொரு நாளும் அதிகாலை 6 மணிக்கு தெய்வீக காணங்களை பாடுதல், கைத்தட்டுதல் உரத்த சத்தத்துடன் சிரித்தல் போன்ற செயற்பாட்டில் ஈடுபடுகின்றனரென செர்சட் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

'சிரிப்பு என்பது தொற்றிப் பரவக்கூடியது என்பது உண்மைதான். ஆனால், உங்கள் ஜன்னலுக்கு அருகிலிருந்து 30 பேர் ஒவ்வொரு நாளும் சிரிப்பொலியை ஏற்படுத்தினால் இவ்வொலியினால் நீங்கள் எழுந்து விடுவீர்கள்' என மேற்படி வயோதிபரின் வழக்குரைஞர் வீனா தாட்னி தெரிவித்துள்ளார்.

அவர்கள், ஒவ்வொருவரையும் சிரிப்பொலியை ஏற்படுத்தும்படி உற்சாகப்படுத்துகின்றனர். வயிற்றினூடாக சிரியுங்கள், கண்களுக்கூடாக சிரியுங்கள், கண்களுக்கூடாக சிரியுங்கள் என அவர்கள் சத்தமிடுகின்றனர்.

பொலிஸார் மேற்படி யோகா பயிலுனர்களுக்கு எதிராக எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. ஏனெனில்; மேற்படி நிலையமானது பதிவுசெய்யப்பட்ட நிலையமல்ல என அவர் கூறினார்.

குறித்த வயோதிபரின் முறைப்பாட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இப்பிரச்சினையை தீர்க்கும்படி பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்தார்.

மக்கள் வீட்டிற்கு முன்பு வந்து சிரிப்பது தேவையற்ற தலைவலியென்றும் அவர் குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .