2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

நிர்வாணமாக பொருட்கள் கொள்வனவில் ஈடுபட்ட வாடிக்கையாளர்கள்

Kogilavani   / 2012 ஜூன் 21 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பர் மார்க்கெட் ஒன்றில் 100 வாடிக்கையாளர்கள் இணைந்து நிர்வாணமாக பொருட்கள் கொள்வனவில் ஈடுபட்ட சம்பவமொன்று ஜேர்மனியில் இடம்பெற்றுள்ளது.

ஜேர்மனியிலுள்ள சுப்பர் மார்க்கெட் ஒன்று, நிர்வாணமாக முதலில் வரும் வாடிக்கையாளர்களுக்கு 220 ஸ்ரேலிங் பவுன் பெறுமதியான பொருட்களை இலவசமாக வழங்குவதாக கூறிய சலுகையை தொடர்ந்து இவ்வாறு வாடிக்கையாளர்கள் பொருட்கள் கொள்வனவில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக நூற்றிற்கும் மேற்பட்டோர்  குறித்த சுப்பர் மார்க்கெட்டின் முனனால் முகாமிட்டுள்ளனர்.

'100 வாடிக்கையாளர்கள் இதற்கு வருவார்களென நான் எதிர்பார்க்கவில்லை. 10 இற்கும் அதிகமானவர்களே வருவார்களென நான் நினைத்தேன்' என இத்திட்டத்தின் உரிமையாளரான ஸ்டேர்ன்டோர்ப் தெரிவித்துள்ளார்.

குழப்ப நிலையை தவிர்த்துக்கொள்வதற்காக இத்திட்டத்தில் 5 தொகுதியினரே உள்வாங்கப்பட்டனர். ஏனைய 250 பேரும் திருப்பியனுப்பப்பட்டனரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0

  • mfmf haq Friday, 22 June 2012 02:05 AM

    சகஜம்மப்பா

    Reply : 0       0

    kamal Saturday, 23 June 2012 12:34 PM

    என்ன கொடுமை

    Reply : 0       0

    nafa Monday, 25 June 2012 04:46 AM

    220 பவுனிக்கு தனது மானத்த விற்க ரெடி.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .