2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

சிலந்திக்குப் பயந்து வீதியில் நிர்வாணமாக ஓடிய இளைஞர்

Kogilavani   / 2012 ஜூன் 15 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிலந்திக்குப் பயந்த இளைஞர் ஒருவர், தனது படுக்கையிலிருந்து எழுந்து நிர்வாணக் கோலத்துடன் வீதியில் ஓடியதாக அமெரிக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நிர்வாணக் கோலத்துடன் நபரொருவர் முற்பகல் வேளையில் தெருவில் ஓடுவது குறித்து இலினோய்ஸ் மாநிலத்தின் அல்பியன் நகர பொலிஸாருக்கு பல தொலைபேசி அழைப்புகள் கிடைத்ததாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பொலிஸார் அந்நபரை கண்டுபிடித்தபோது அந்நபர் தனது வீட்டுக்குத் திரும்பி காற்சட்டையொன்றை அணிந்திருந்தார்.

உள்நாட்டு தொழிற்சாலையொன்றில் இரவு நேரத்தில் தொழில்புரியும் 20 வயது இளைஞர் மேற்படி இளைஞர் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த வேளையில் அவரது படுக்கையறையில் சிலந்தி இருப்பதைக்  கண்டு பயந்ததாக பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

அவ்விளைஞர் வீட்டிலிருந்து வெளியேறும்போது தனது வீட்டின் கண்ணாடி கதவை உடைத்துக்கொண்டு வெளியேறியதுடன் அவரின் கைகள், கால்கள் மற்றும் விரல்களில் காயங்கள் ஏற்பட்டன.

மேற்படி நபர் ஆடையில்லாமல் உடலில் இரத்தம் கொட்டிய நிலையில் காலை 11 மணிக்கு தெருவை சுற்றி ஓடியதாக அயலவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேற்படி இளைஞர் உடனடியாக அம்பியுலன்ஸ் வாகனமொன்றில் ஏற்றப்பட்டு  வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இச்சம்பத்தில் போதைப்பொருள் அல்லது மது பாவனை சம்பந்தப்பட்டிருக்கலாம் என தான்  நம்பவில்லை என  மேற்படி பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0

  • jazny Wednesday, 20 June 2012 03:19 AM

    அல்லாஹ்வுக்கு அஞ்சியிருந்தால் இதெல்லாம் இல்லவே இல்ல...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .