2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

வீதியில் திடீரென ஏற்பட்ட குழிக்குள் வீழ்ந்த பஸ்

Kogilavani   / 2012 ஜூன் 13 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் மினி பஸ்ஸை செலுத்திக்கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட 20 அடி ஆழமான குழிக்குள் தனது மினி பஸ் வீழ்ந்ததாக சாரதியொருவர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவமானது சீனாவின் குய்லன் நகரில் இடம்பெற்றுள்ளது.

ஒரு வாரமாக பெய்த மழைக் காரணமாக  வீதியின் அடித்தளம் பாதிக்கப்பட்டிருந்ததால் இந்நிலைமை ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

எனினும் இதற்கான எந்த அறிகுறியும் தென்படாத  நிலையில் வீதியில் திடீரென ஏற்பட்ட 20 அடி அகலமான குழிக்குள் பஸ் விழுந்துள்ளது.  7 அடி ஆழம் கொண்டதாக இக்குழி காணப்பட்டது.

'பூகம்பம் ஏற்பட்டுவிட்டதாக நான் நினைத்தேன். திடீரென எனக்கு கீழே தரை காணமல் போய்விட்டதாக உணர்ந்தேன்' என குறித்த பஸ்ஸின் சாரதி தெரிவித்துள்ளார். எனினும் தான் பஸ்ஸிலிருந்து பாதுகாப்பாக வெளியேறியதாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .