2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

தங்கமுலாமிடப்பட்ட பாலியல் பொம்மையை ஆயுதமுனையில் கொள்ளையடித்த நபர்

Kogilavani   / 2012 ஜூன் 09 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆடம்பர பாலியல் பொம்மைகள் விற்பனை கடையொன்றில் புகுந்த ஆயுதபாணி கொள்ளையன் ஒருவன், 18 கரட் தங்கமுலாம் பூசப்பட்ட பாலியல் பொம்மையொன்றை திருடி சென்ற சம்பவம் பிரேஸிலில் இடம்பெற்றுள்ளது.

இந்நபர் பிரேஸில் தலைநகர் பிரெஸிலியாவிலுள்ள கடைக்கு சென்று கடையின் ஊழியரை கட்டி வைத்துவிட்டு, காட்சிப்பெட்டியில் வைத்திருந்த பாலியல் பொம்மையை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுவீடனில் தயாரிக்கப்பட்ட இந்த பாலியல் பொம்மை, சுமார் 5 லட்சம் ரூபா பெறுமதியானது. இந்த பொம்மையை தவிர வேறு எதனையும் அக்கடையில் மேற்படி கொள்ளையன் திருடவில்லை.

எனினும், அப்பாலியல் சாதனத்திற்கு மின்னேற்றும் கருவியை அவன் எடுத்துச் செல்லவில்லை என  கடை உரிமையாளர் வனேஸா பால்டினி தெரிவித்துள்ளார்.

'அதை வைத்துக்கொண்டு அவன் என்ன செய்யப் போகிறான் என்பது குறித்து எனக்கு தெரியவில்லை. அதை அவனது கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்' என  அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .