2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

நிர்வாண பெண்ணுக்கு தலைக்கவசம் அணியாமைக்காக மாத்திரம் அபராதம்

Kogilavani   / 2012 ஏப்ரல் 30 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிர்வாணக் கோலத்தில் மோட்டார் சைக்கிளின் பின் ஆசனத்தில்  பயணித்த பெண்ணொருவருக்கு தலைக்கவசம் அணியாதமைக்காக மாத்திரம்  அபராதப் பத்திரம் வழங்கிவிட்டு அவரின் பயணத்தை தெடர போக்குவரத்து பிரிவு பொலிஸார் அனுமதித்த சம்பவமானது ருமேனியாவில் இடம்பெற்றுள்ளது.

அப்பெண் நிர்வாண கோலத்துடன் பயணிப்பதை கண்ட பொலிஸ் உத்தியோகஸ்தர் அப்பெண்ணை தடுத்து நிறுத்தினார்.

ஆனால் வீதியில் பயணித்த ஏனைய சாரதிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பெண் நிர்வாணக் கோலத்திலிருந்தமை
குறித்து பொலிஸ் உத்தியோகஸ்தர் அலட்டிக்கொள்ளவில்லை.

இதனை நேரில் கண்ட ஒருவர் இது குறித்து தெரிவிக்கையில்,

'மேற்படி அதிகாரி போக்குவரத்து பொலிஸ் அதிகாரியொருவராவார். குறித்த பெண் தலைக்கவசம் அணியாமல் வீதியில் பயணித்ததை மாத்திரமே அப்பெண் புரிந்த குற்றமாக இருந்தது. அதனால்  அப்பெண்ணுக்கு பொலிஸ் உத்தியோகஸ்தர் எச்சரிக்கை விடுத்ததுடன் தலைக்ககவம் அணியாமைக்கான அபராதம் குறித்த பத்திரத்தையும் வழங்கினார். அதன்பின் அப்பெண்ணும் அவருடன் சென்ற நபரும் பயணத்தை தொடர அனுமதிக்கப்பட்டனர்' என்றார்.

You May Also Like

  Comments - 0

  • ilmudheen hafis Saturday, 12 May 2012 07:45 AM

    aliu nichayam

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .