2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

அரசாங்கத் தொழிலுக்காக தந்தையை கொலை செய்த மகன்

Kogilavani   / 2012 ஏப்ரல் 29 , பி.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர், அரசாங்கத் தொழிலொன்றை பெற்றுக்கொள்ள வேண்டுமென்பதற்காக தனது தந்தையை கொலை செய்துள்ளார்.

தமிழ்நாட்டின் திருவண்ணமாலை மாவட்டத்தை சேர்ந்த ஈ.முருகன் என்ற 30 வயது நபரே இவ்வாறான செயலில் ஈடுப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி நபர் தனது தந்தையான ஜி.ஏழுமலை என்பவரை தனது நண்பனின் உதவியுடன் கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

58 வயதான ஏழுமலை என்பவர் பருவதமலை காட்டில் வன பாதுகாப்பு உத்தியோகஸ்தாராக கடமையாற்றி வந்துள்ளார். இவர் ஓய்வு பெறுவதற்கு ஒரு சில மாதங்களே இருந்துள்ளன.

இந்நிலையில், கடமையிலிருக்கும்போது தந்தை இறந்து போனால், இழப்பீட்டு அடிப்படையில் அரசாங்கத் தொழிலொன்றை தான் பெற்றுக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில் தனது தந்தையான ஏழுமலையை  தனது நண்பனின் உதவியுடன் கொலை செய்வதற்கு முருகன் திட்டமிட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குடும்பத்துடன் பண்ணையில் வசித்து வந்த ஏழுமலையை மேற்படி இருவரும் கொலை செய்துள்ளனர். தனது கணவரின் உடலை பார்த்த ஏழுமலையின் மனைவி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

ஆரம்பத்தில் இக்கொலை தொடர்பில் தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஏழுமலையின் குடும்பத்தினரை விசாரிக்கும்போது அவரது மகன் முருகனின் மீது சந்தேகம் எழுந்தது என புலனாய்வு பிரிவு அதிகாரியும் இன்ஸ்பெக்டருமான டி குமார் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .