2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

பாலாறு ஓட வைத்த வாகன விபத்து

Kogilavani   / 2012 ஏப்ரல் 23 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

9000 லீற்றர் பால் நிரப்பப்பட்ட பௌஸர் வாகனமொன்று வீதியில் குடைசாய்ந்ததால்  அதில் உள்ளடக்கப்பட்டிருந்த பெருமளவான பால் வீதியில் கொட்டிய சம்பவமொன்று சுவிட்ஸர்லாந்தில் இடம்பெற்றுள்ளது.

மேற்படி வாகனமானது துஸிஸ் நகரைநோக்கி சென்றுகொண்டிருந்தபோது, வளைவொன்றில் திருப்பப்பட்டபோது  கவிழ்ந்தது.

இந்த விபத்தின் காரணாமாக, தாங்கி உடைந்ததால் சுமார் 6000 லீற்றர் பால் வீதியில் கொட்டப்பட்டதுடன் அருகிலருந்த ஆற்றிலும் கலந்துள்ளது. இதனால் ஆறு வெள்ளை நிறமாக காட்சியளித்தது.

இவ்விபத்தைத் தொடர்ந்து அவ்வீதி வழியான போக்குவரத்துக்கு ஒரு மணித்தியால் தடை விதிக்கப்பட்டிருந்தது.

வீதியிலும் ஆற்றிலும் சிந்தப்பட்ட பால் கழுவிச் செல்லப்பட்டுள்ளதால பாரிய சூழல் பாதிப்பு எதுவும் ஏற்படாது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .