2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

நாய்களுக்காக விசேட தொலைக்காட்சி அலைவரிசை

Kogilavani   / 2012 ஏப்ரல் 21 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாய்களுக்கான விசேட தொலைக்காட்சி அலைவரிசையொன்று அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

'டோக் ரீவி' என அழைக்கப்படும் மேற்படி அலைவரிசையானது ஏற்கனவே அமெரிக்காவின் சான்டியாகோ நகரில் கேபிள் ரீவி ஊடக பிரபலமாகியுள்ளது. இந்நிலையில் அமெரிக்கா  முழுதும் அந்த அலைவரிசையை ஒளிபரப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ் அலைவரிசையானது நாய்களின் உரிமையாளர்கள் வேலையில் இருக்கும்போது நாய்களை மகிழ்வூட்டுவதற்கும்  பொழுதுபோக்கிற்கும் ஏற்ற வகையில் நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

நாய்களின் கோணத்தில் விசேடமாக வடிவமைக்கப்பட்ட காட்சிகள்,  ஒலிகள், மற்றும் இசைகள் கொண்ட படங்கள் இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகின்றன.

தனது நாயனது டோக் ரீவியின் மிகப் பெரிய ரசிகன் என சண்டியாகோவை சேர்ந்த பெண்ணொருவர் தெரிவித்துள்ளார்.

'நான் எப்போதும் வேலையில் இருக்கும்போது அவனை விட்டு பிரிவதை ஒரு குற்றமாக உணர்கிறேன். அந்த நாயை சந்தோசப்படுத்தும் எதுவும்  என்னையும் சந்தோசப்படுத்தும்' என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .