2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

நிர்வாண ஆபிரிக்க பெண்ணின் தோற்றத்திலான கேக் வெட்டிய சுவீடன் அமைச்சர் நெருக்கடியில்

Kogilavani   / 2012 ஏப்ரல் 20 , பி.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}



நிர்வாணமான ஆபிரிக்க பெண்ணின்  தோற்றத்தில் வடிவமைக்கப்பட்ட கேக்கை வெட்டியமைக்காக சுவீடன் நாட்டின் கலாசார அமைச்சர் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளார்.

சுவீடன் நாட்டில் நவீன ஓவியங்களில் நூதனசாலையில் நடைபெற்ற வைபவத்திற்கு  சுவீடன் கலாசார அமைச்சர் லேனா அன்டெல்சன் லிலிஜேரோத் அழைக்கப்பட்டிருந்தார்.

இந்நிகழ்வில் நிர்வாணமான ஆபிரிக்க பெண்ணின் தோற்றத்தில்  கறுப்பு நிறத்திலான கேக் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. இரத்த நிறத்திலான சிவப்பு துணியையும் கொண்டிருந்த இந்த கேக், ஆபிரிக்காவில் பெண்களின் அந்தரங்க உறுப்பு
 சிதைக்கப்படுவதை   வெளிப்படுத்தும் விதத்தில் அமைக்கப்பட்டிருந்தது.

இந்த கேக்கை வெட்டியமைக்காகவே மேற்படி அமைச்சர் நெருக்கடியை நிலையை எதிர்கொண்டுள்ளார். இந்த கேக்கானது இனத்துவேசத்தை வெளிப்படுத்துவதாக, மோசமான ரசனை கொண்டதென சிலர் விமர்சித்துள்ளனர்.

மேற்படி நிகழ்வில் பங்குப்பபற்றியதற்காக குறித்த அமைச்சர் பதவி விலக வேண்டுமென அவர்கள் கோரியுள்னனர்.

மேற்படி கேக்கானது குரூரமான முறையில் இனத்துவத்தை வெளிப்படுத்தி நிற்கும் கேலிச்சித்திரமாக உள்ளதென்றும் ஒரு இனத்தை பரிகாசிப்பதாக அமைந்துள்ளது என்றும் சுவீடனிலுள்ள ஆபிரிக்கர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

உங்களது இந்த செயற்பாடானது இன ரீதியில் மக்களை மிக மோசமாக பரிகசிப்பதற்கு மட்டுமே நோக்கமாக கொண்டுள்ளது என்பதை வெளிப்படுத்தி நிற்கின்றது என மேற்படி அமைப்பின் பேச்சாளர் கிட்டிம்பவா சபுனி தெரிவித்துள்ளார்.

ஆனால், 'மேற்படி கேக்கை உருவாக்கிய பெண்ணான மெகோடி லின்டி என்பவர் இது தவறாக அர்த்தம் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இந்த கேக்கின் தலைப்பகுதியில் இவர் தனது சொந்த தலையை இணைத்து காட்சிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

சுவீடன் கலாசார அமைச்சர் லேனா அன்டெல்சன் லிலிஜேரோத் விமர்சனங்களுக்கு பதிலளிக்கையில்,  'நான் உலக ஓவிய தினத்தை கொண்டாடுவதற்காக மேற்படி நிகழ்வுக்கு அழைக்கப்பட்டேன். இந்த கேக்கை முதலில் நான் வெட்ட வேண்டுமென

அவர்கள் விரும்பினார்கள். நான் இந்த கலையை பரிசீலனை செய்யவில்லை. ஆனால் இது தவறாக அர்த்தப்படுத்தப்பட்டுள்ளது என்பதை என்னால் நன்றாக விளங்கிக்கொள்ள முடிகின்றது'  எனத் தெரிவித்துள்ளார்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .