2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

முட்டையிடுவதற்குப் பதிலாக நேரடியாக குஞ்சை ஈன்ற கோழி

Super User   / 2012 ஏப்ரல் 18 , பி.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


கோழியொன்று முட்டையிடுவதற்குப் பதிலாக தனது உடலுக்குள் பொரிக்கப்பட்ட குஞ்சை ஈன்ற சம்பவம் வெலிமடையில் இடம்பெற்றுள்ளது.

வெளிமடை, கெந்திரிமுல்ல, நெடுன்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஈ.எம்.ரஞ்சித் என்பவரின் வீட்டிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவரின் வீட்டிலுள்ள ஆறு கோழிகளில் ஒரு கோழி மாத்திரம் முட்டையிடாமல் இருந்தது. ஆனால் அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கும் வகையில் கோழிக்குஞ்சொன்றை அது ஈன்றது.

குஞ்சை ஈன்றபின் அக்கோழி இறந்துவிட்டது. எனினும் அக்கோழிக்குஞ்சு நலமாக உள்ளது.

இவ்வாறான ஒரு சம்பவத்தை தான் கேள்விப்படுவது இதுவே முதல் தடவை என வெலிமடை பிரதேச தலைமை மிருக வைத்திய அதிகாரி பி.ஆர்.யாப்பா கூறினார்.

"அந்த கோழியின் உடலை பிரித்துப் பார்த்தேன். அந்த முட்டை கோழியின் உடலிலிருந்து வழக்கமான வழியில் வெளிவரவில்லை. அது கோழியின் உடலுக்குள் அடை காக்கப்பட்டுள்ளது. இறுதியில் கோழியின் உடலிலிருந்து நேரடியாக கோழிக்குஞ்சு வெளிவந்துள்ளது. அம்முட்டை கோழியின் உடலுக்குள் 21 நாட்களுக்கு மேலாக இருந்துள்ளது" என அவர் கூறினார்.




You May Also Like

  Comments - 0

  • mohamed ali Thursday, 19 April 2012 07:20 AM

    சுபகனல்லாஹ்..................

    Reply : 0       0

    MADURANKULI KURANKAAR Thursday, 19 April 2012 08:26 AM

    இறைவனின் அதிசயத்தில் இதுவும் ஒன்று

    Reply : 0       0

    abdul basith Thursday, 19 April 2012 01:44 PM

    Subuhanallah

    Reply : 0       0

    AASIRF Wednesday, 25 July 2012 06:35 AM

    ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .