2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

தனது பிறந்த தினத்தை மறந்த கணவரை கொலை செய்த மனைவி

Kogilavani   / 2012 ஏப்ரல் 18 , பி.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

மனைவியின் பிறந்த தினத்தை மறந்து வெறுங்கையுடன் வீடு திரும்பிய கணவரை அம்மனைவி கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் ரஷ்யாவில் இடம்பெற்றுள்ளது.

லயாலா டுபிகோவா எனும் 45 வயது பெண்ணே தனது கணவரான கல்பிக் (50 வயது) என்பவரை  கொலை செய்துள்ளார்.

ரஷ்யாவின் தென்பகுதி நகரான ஆஸ்ட்ராஹன் நகரிலுள்ள அலுவலகத்திலிருந்து தனது கணவர் வீடு திரும்புபோது தனக்கு மலர்கொத்தைம் பிறந்த தின பரிசையும் வாங்கி வருவார் என்ற பெரும் எதிர்பார்ப்புடன் லயாலா காத்திருந்துள்ளார்.

அப் பெண் இரவு விருந்தொன்றையும் ஏற்பாடு செய்திருந்துள்ளார்.

ஆனால் காபிக் வீடு திரும்பும் போது வெறுங்கையுடன் சென்றுள்ளரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனது கணவர் தனது பிறந்த தினத்தை மறந்துவிட்டு வெறுங்கையுடன் வீடு திரும்பியதால் ஆத்திரமடைந்த அப்பெண் திடிரென கணவரின் இதயத்திற்கு மேலாக கத்தியால் குத்தியுள்ளாதாகவும் அதனால் அந்நபர் இறந்துவிட்டதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

லயலா டுபி கோவ் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதுடன் தற்போது சிறைத்தண்டனையை எதிர்நோக்கியுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .