2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

தொலைபேசி பாவனையை கண்டித்த அதிபரை கொல்வதற்கு துப்பாக்கியுடன் அலைந்த மாணவன்

Kogilavani   / 2012 ஏப்ரல் 18 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


பாடசாலையில் தொலைபேசி பாவனையை தவிர்க்கும்படி எச்சரித்த பாடசாலை அதிபரை கொல்வதற்காக துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் அலைந்த சிறுவன் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட சம்பவமொன்று மேற்கு வங்காளத்தில் இடம்பெற்றுள்ளது.

கொல்கத்தாவிலிருந்து 200 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள டோம்கல் பகுதியில் கங்காதாஸ் வித்யாபதி பாடசாலையில் கல்விக் கற்கும் மாணவனே இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.

மேற்படி மாணவன் தனது புத்தக பையில் வெற்று துப்பாக்கியையும் தோட்டாக்களையும் வைத்திருந்து நிலையில் பாடசாலைக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிஸார் பாடசாலைக்கு சென்றபோது குறித்த மாணவன் தனது வகுப்பு மாணவர்களால் சுற்றி வளைக்கப்பட்டு கயிறொன்றினால் கட்டப்பட்ட நிலையில் இருந்துள்ளார்.

'உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியும் 5 தோட்டாக்களும் மேற்படி மாணவனிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன.  இம்மாணவன் துப்பாக்கியை எங்கிருந்து எப்படி பெற்றான் என்பது குறித்த விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றோம்' என டோம்காலியின் உப பிரிவு பொலிஸ் அதிகாரி டேபார்சி ரோய் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .