2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

ஆண்களின் உறுப்புகளை குளிரிலிருந்து பாதுகாப்பதற்கு விசேட ஆடை தயாரிக்கும் பெண்

Kogilavani   / 2012 ஏப்ரல் 01 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

குரோஷியாவைச் சேர்ந்த பெண்ணொருவர், ஆண்களின் அந்தரங்க உறுப்புகளை கடும் குளிரிலிருந்து பாதுகாப்பதற்கான விசேட ஆடைகளை பின்னல் முறையில் தயாரித்து வருகிறார்.

குரோஷியாவின் தொலைதூர மலைப் பிராந்தியமான எம்.கோபால்ஜியில் பல நூற்றாண்டுகளுக்கு முன் தமது கணவர்களின் அங்கங்களை கடும் குளிரிலிருந்து பாதுகாப்பதற்காக இத்தகைய ஆடைகளை தயாரிப்பதை பெண்கள் வழக்கமாக கொண்டிருந்தனராம். இந்த பாரம்பரியத்தை தான் மீள வெளிக்கொணர்ந்துள்ளதாக ரட்மிலா குஸ் எனும் இப்பெண் கூறுகிறார்.

ஆனால் இவர் வர்த்தக ரீதியில் இந்த ஆடைகளை தயாரித்து விநியோகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
'இங்கு பலநூற்றாண்டுகளாக உள்ளூர் ஆண்கள் இதை அணிந்தனர். அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட துணிகள் சிறந்த தரமுடையவை அல்ல. குளிரிலிருந்து கணவரின் அங்கத்தை பாதுகாப்பதன் மூலம்,  அவர்கள் தொடர்ந்து கருத்தரிக்கும் ஆற்றலை கொண்டிருக்கச் செய்யமுடியும் என அப்பெண்கள் கருதினர்' என 55 வயதான ரட்மிலா கூறுகிறார்.

தனது தயாரிப்புகள் அதிகளவில் விற்பனையாவதால் இதற்காக பலரை வேலைக்கு நியமித்துள்ளார் ரட்மிலா.

இதை தயாரிப்பதற்காக அங்கத்தை அளவெடுக்க வேண்டியிருக்கும். ஆனால் ஆண்கள் வெட்கப்பட்டால் அவர்களாகவே அளந்துகொண்டு அளவுகளை தரலாம். நான் குளிர்காலத்திற்கான சப்பாத்துகளையும் பின்னல் முறையில் தயாரித்தேன். ஆனால் சப்பாத்துக்களைவிட இதுஅதிகம் பிரபலமாகிவிட்டது என ரமில்டா தெரிவித்துள்ளார்.

ரட்மிலாவின் தயாரிப்புகள் குறித்து பேசுவதற்காக அமெரிக்காவுக்கும் இவர் அழைக்கப்பட்டுள்ளார். அங்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்காக தனது பிரத்தியேக தயாரிப்பொன்றை அன்பளிப்புச் செய்ய ரட்மிலா திட்டமிட்டுள்ளாராம்.


You May Also Like

  Comments - 0

  • neethan Sunday, 01 April 2012 11:09 PM

    ஒபாமாவுக்கு வழங்கும் பிரத்தியேக தயாரிப்பு இன்னுமொரு மோனிக்கா லுவின்சியை (கிளின்டன்) உருவாக்குமோ?

    Reply : 0       0

    mfmifham Monday, 02 April 2012 04:24 AM

    ரட்மிலா உங்களுக்கு ஒபாமாவின் சைஸ் தெரியுமா ?.......

    Reply : 0       0

    Mubeen kky Wednesday, 04 April 2012 02:13 PM

    உங்கள் சேவை ஒபாமாவுக்குத் தேவை!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .