2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

பேஸ் புக் மூலம் திருடர்களை இனங்கண்ட உணவு விடுதி உரிமையாளர்

Super User   / 2012 மார்ச் 25 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியின் வெனிஸ் நகரிலுள்ள உணவுவிடுதியொன்றில் கணினி மற்றும் பொருட்களை திருடிய நபர்களை அதன் உரிமையாளர்கள் பேஸ் புக் உதவியுடன் கண்டுபிடித்துள்ளார்.

திருடர்களை கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் திணறிக்கொண்டிருந்த நிலையில், அத்திருட்டுச் சம்பவத்தின்போது கண்காணிப்பு கமெராவில் பதிவாகியிருந்த நபர்களின் படங்களை ....திருடர்களை கண்டுபிடிப்பதற்கு பொலிஸார் திணறிக்கொண்டிருந்த நிலையில், அத்திருட்டுச் சம்பவத்தின்போது கண்காணிப்பு கமெராவில் பதிவாகியிருந்த நபர்களின் படங்களை உணவு விடுதியின் உரிமையாளர் டென்னிஸ் மொன்டினோ அவ்விடுதியின் பேஸ் புக் பக்கத்தில் வெளியிட்டார்.

அதையடுத்து இரு நாட்களில் திருடர்கள் அடையாளம் காணப்பட்டனர். "'நான் பொலிஸாரை விமர்சிக்கவில்லை. ஆனால் இக்காலத்தில் மிக விரைவான, நவீன முறைமைகள்  இருக்கும்போது அதை பயன்படுத்துவது அவசியம்" என டென்னிஸ் மொனிட்டோ கூறியுள்ளார்.

இத்திருட்டுச் சம்பவம் தொடர்பாக ஆண் ஒருவரையும் யுவதியொருவரையும் கைது செய்து விசாரித்து வருவதாக இத்தாலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .