2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

மல்யுத்த போட்டியில் பங்குபற்றிய பெண்ணின் செயற்கை மார்பகம் வெடித்தது

Kogilavani   / 2012 மார்ச் 21 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}



காட்டில் நெருக்கடிகளுக்கு மத்தியில் தாக்குப்பிடித்தல் தொடர்பான நிகழ்வொன்றில்  பங்குபற்றிய பெண்ணொருவரின் செயற்கை மார்பகம் மல்யுத்த போட்டியொன்றின்போது உடைந்த சம்பவம் மலேஷியாவில் இடம்பெற்றுள்ளது.

தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றுக்காக மலேஷியாவின் தூரப்பிரதேச காட்டில்  நடத்தப்பட்ட இந்த நிகழ்வு ஒளிப்பதிவும் செய்யப்பட்டுக்கொண்டிருந்தது.

இதில் பங்குபற்றிய பெண்கள் 10 பேர் சேற்று மல்யுத்த போட்டியொன்றிலும் ஈடுபட்டனர். அப்போது சுவீடனைச் சேர்ந்த லீனா ஹெல்க்விஸ்ட் எனும் 24 வயதான பெண்,  செயற்கை மார்பகத்தை அழகுபடுத்துவதற்காக பொருத்தியிருந்த சிலிக்கன் பை திடீரென உடைந்தது.

இதனால் அப்போட்டி நிகழ்ச்சி கைவிடப்பட்டு அப்பெண் ஹெலிகொப்டர் மூலம் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

'அது திடீரென வெடித்துவிட்டது. என்ன நடந்ததென புரியாமல் ஏனைய யுவதிகள் திகைத்துக்கொண்டிருந்தனர்' என அப்பெண் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். இவர் தற்போது சுவீடனில் சத்திரசிகிச்சை செய்துகொள்வதற்கு காத்திருக்கிறார்.


You May Also Like

  Comments - 0

  • செம்பகம் Thursday, 22 March 2012 03:19 PM

    இது உமக்குத் தேவையோ இறைவனுக்கு தெரியும் யார் யாருக்கு எத எத எப்படி வைக்கனும் என்று

    Reply : 0       0

    aboosulaim Monday, 26 March 2012 02:20 AM

    ஹா ஹா ஹா ஹா. தேவையா இந்த கருமம் எல்லாம். உள்ளதைக்க் கொண்டு திருப்தி அடையுங்கள் .

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .