2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலில் துகிலுரி மங்கை போட்டி

Kogilavani   / 2012 மார்ச் 17 , பி.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

துகிலுரி நடனத்தில் பெயர் பெற்ற பெண்ணொருவர், பிரான்ஸில் நடைபெறவுள்ள தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி நிக்கலஸ் சார்கோஸியை எதிர்த்து போட்டியிடவுள்ளார்.

இஸபெல்லா லாங் எனும் உண்மையான பெயரைக்கொண்ட இப்பெண் சின்டி லீ எனும் பெயரில் துகிலுரி நடனக்கலைஞராக தொழில்புரிந்தவர். அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு அவர் தீர்மானித்துள்ளார்.

பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு 500 நகரங்களின் மேயர்கள் அல்லது துணை மேயர்களின்  கையெழுத்துக்களை பெறவேண்டும். இதனால் இக்கையெழுத்து பெறும் நடவடிக்கையை அவர் ஆரம்பித்துள்ளார்.

இஸபெல்லாவுக்கு ஆதரவு தெரிவித்த டோலன் நகர மேயர் ரோஜர் லகாச் கருத்துத் தெரிவிக்கையில், உயர் பதவிகளில் அதிக பெண்கள் இருப்பதை காண்பதற்கு தான் விரும்புவதால் இஸபெல்லாவுக்கு தான் ஆதரவளிப்பதாக கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0

  • Ismail Sunday, 18 March 2012 03:13 PM

    Sure she will form a government which will have a good transparency since she has already proved her 'transparency'

    Reply : 0       0

    neethan Sunday, 18 March 2012 10:36 PM

    துகிலுரி மங்கைக்கு விட்டு கொடுத்தாலும் ஆச்சரியமில்லை.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .