2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

விபசாரத்திற்காக பாலியல் பெட்டிகள் அமைப்பதற்கு சுவிஸ் மக்கள் ஆதரவு : விடுமுறை நீடிப்பு எதிர்ப்பு

Kogilavani   / 2012 மார்ச் 15 , பி.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

விபச்சாரிகள் தமது வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றுவதற்கு வசதியாக  வாகனத் தரிப்பிடங்களில் பாலியல் பெட்டிகளை நிர்மாணிப்பதற்கு ஆதரவாக சுவிட்ஸர்லாந்து  மக்கள் வாக்களித்துள்ளனர்.

சுவிஸின் சூரிச் நகரப்  பகுதியில் விபசாரிகள் விபசார நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக சுமார் 40 கோடி ரூபா செலவில்  இந்த பெட்டிகள் அமைக்கப்படவுள்ளன.

சூரிச் நகரில் வேகமாக விஸ்தரிக்கப்பட்டு வரும் சிவப்பு விளக்குப் பகுதியில் 24 மணித்தியாலங்களும் செக்ஸ் காட்சிகளை பார்க்கவேண்டியிருப்பதாக அங்கு வசிக்கும் மக்கள் தெரிவித்த முறைப்பாட்டையடுத்து, விபசாரிகளின் சேவைகளுக்காக கார் அளவிலான பாலியல் பெட்டிகள் எனப்படும் மறைவிடங்களை அமைக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டது.

'அவர்கள் பட்டப்பகலில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றனர். நாங்கள் அதனை பார்த்து சகித்துக்கொள்ள முடியாதுள்ளது' என உள்ளூர்வாசியொருவர்  தெரிவித்துள்ளார்.

பொலிஸ் பேச்சாளரான ரெடோ கசனோவா தெரிவிக்கையில், 'நாங்கள் விபசாரத்தை ஒழிக்க முடியாது. அதனால் நாம் அதனை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதை கற்றுக்கொள்ள வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

இதேவேளை தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்துடனான வருடாந்த விடுமுறையை 4 வாரங்களிலிருந்து 6 வாரங்களாக அதிகரிக்க வேண்டும் என்ற தொழிற்சங்கங்களின் கோரிக்கைக்கு எதிராக சுவிஸ் மக்கள் வாக்களித்துள்ளனர்.

பாலியல் பெட்டிகள், விடுமுறை நீடிப்பு உட்பட 5 விடயங்கள் தொடர்பாக சுவிட்ஸர்லாந்தின் கென்டோன் எனப்படும் 26 மாகாணங்களிலும் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் மூன்றில் இரு பகுதி கென்டோன்களிலுள்ள மக்கள் விடுமுறை நீடிப்புக்கு எதிராக வாக்களித்தனர்.

இத்தீர்மானத்தை வர்த்தகத் தலைவர்கள் வரவேற்றுள்ளனர். இவ்விடுமுறை நீடிப்புத் திட்டம் அங்கீகரிக்கப்பட்டிருந்தால் அது சுவிஸ் பொருளாதாரத்திற்கு 600 கோடி சுவிஸ் பிராங் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என மதிப்பிடப்பட்டிருந்தது.


 


You May Also Like

  Comments - 0

  • BAANU Friday, 16 March 2012 04:22 PM

    நிச்சயமா நிலநடுக்கம் வரும்

    Reply : 0       0

    ilyas Friday, 16 March 2012 07:51 PM

    சுனாமி வர அதிக வாய்ப்பு இருக்கிறது

    Reply : 0       0

    ikmsm Friday, 16 March 2012 10:30 PM

    "நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது." ஆல் குரான் 17:32

    Reply : 0       0

    easternbrother Saturday, 17 March 2012 03:50 AM

    ""Do not be deceived: neither the sexually immoral, nor idolaters, nor adulterers, nor men who practice homosexuality, nor thieves, nor the greedy, nor drunkards, nor revilers, nor swindlers will inherit the kingdom of God. And such were some of you. But you were washed, you were sanctified, you were justified in the name of the Lord Jesus Christ and by the Spirit of our GOD"".
    1 Corinthians 6:9-11 (ESV)

    Reply : 0       0

    Kamal Saturday, 17 March 2012 05:40 PM

    கொழும்பில் இருக்கிற நம்மட லாட்ஜ்கள் மாதிரி இல்ல?

    Reply : 0       0

    நல்லவன் Monday, 19 March 2012 02:42 AM

    நிச்சயமாக அவர்களுக்கு கேடு தான்!!!

    Reply : 0       0

    RICHARD Monday, 19 March 2012 04:58 PM

    GOD WILL PUNISH WHO SUPPORT FOR THIS AND STOP TELLING WE ARE CIVILIZED PEOPLE.... IF ANY MAN CAN SEND HIS WIFE FOR PROSTITUTION HE MUST BE A MAN WITH NAKED.... BEFORE IMPLEMENT TAKE A VOTING FROM WOMEN ABOUT THIS UNCIVILIZED PRACTICE.

    Reply : 0       0

    avatar Monday, 19 March 2012 09:24 PM

    swissitku oru visa edukka mudiyaatha?

    Reply : 0       0

    samhan Monday, 16 April 2012 05:14 PM

    ஏன் இந்த குலவெறி

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .