Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Kogilavani / 2012 மார்ச் 12 , பி.ப. 12:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவில், 'விபசார கிராமம்' என அழைக்கப்படும் வாடியா கிராமத்தில் 8 பெண்களுக்கு இன்று ஒரே நேரத்தில் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. மேற்படி பெண்களின் தாய்மார்கள் பாலியல் தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத் மாநிலத்தில் உள்ள வாடியா கிராமம் பாலியல் தொழிலாளர்களுக்கு பெயர்பெற்றது. அங்குள்ள 'சார்னியா சமூகம்' எனும் சமூகத்தில் விபச்சாரம் பாரம்பரியமானதாக உள்ளது. அச்சமூகத்தை சேர்ந்த பெண்கள் விரும்பியோ விரும்பாலோ பாலியல் தொழிலுக்கு நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். பெண்கள் பாலியல் தொழிலாளர்களாக பணியாற்ற, ஆண்களில் பலர் தமது மனைவிக்கும் மகள்களுக்கும் வாடிக்கையாளர்களை அழைத்து வருவதையே தொழிலாக கொண்டுள்ளனர்.
ஆனால், அச்சமூகத்தின் வழக்கப்படி திருமணமான அல்லது திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண்களை இப்பாலியல் தொழிலுக்கு கட்டாயப்படுத்த முடியாது.
இந்நிலையில் அச்சமூகத்தை சேர்ந்த இளம் பெண்களை இக்கொடுமையான வாழ்க்கையிலிருந்து காப்பாற்றுவதற்கு தீர்மானித்த விச்சாரட்டா சமுதாய் சமர்தான் மன்ச் எனும் தொண்டர் நிறுவனம் அங்குள்ள பெண்கள் பலரை திருமணம் செய்துகொள்ளத் தூண்டியது. அங்குள்ள இளைஞர்களிடமும் இது குறித்து அவ்வமைப்பு கலந்துரையாடிது. இதன்படி 8 ஜோடிகளுக்கு இன்று கூட்டாக திருமணம் நடைபெற்றது.
இளம் பெண்கள் இப்பாரம்பரிய விபசார நடவடிக்கையிலிருந்து பாதுகாக்கப்படவேண்டுமென்பதே இத்திருமனத்தின் நோக்கம் என நாடோடி சமூகங்களுக்கு இடையில் பணியாற்றும் மேற்படி தொண்டர் நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இப்பெண்கள் 18 வருடங்களுக்கும் சற்று அதிக வயதானவர்கள். இத்திருமண நிகழ்வின்போது 18 வயதிற்கு கீழ்ப்பட்ட மேலும் 12 சிறுமிகளுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால், குறைந்தபட்சம் 3 நிச்சயதார்த்த நிகழ்வுகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. அவர்களுக்கான ஆண்கள் இந்நிகழ்விற்கு சமூகமளிக்காமையே இதற்கு காரணம்.
'நாங்கள் ஒருபோதும் இந்த பெண்கள் பிழை செய்கின்றார்கள் என்று கூறிவில்லை. அதில் அர்த்தமில்லை. நாம் அவர்களுக்கு வேறு தொழிற்பயிற்சிகள், உதவிகளை வழங்கி வேறு ஜீவனோபாய மார்க்கங்களை காண்பித்துள்ளோம்' என மேற்படி அமைப்பின் இணைப்பாளர் மித்தால் பட்டேல் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
1 hours ago
1 hours ago