Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Kogilavani / 2012 மார்ச் 03 , மு.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
இளைஞர் ஒருவர் தனக்கு தொழில் கிடைக்காதமைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக நிர்வாணகோலத்துடன், தான் தங்கியிருந்த அறையின் கூரை மீதேறி கூரைக்கு தீ வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.
சாவோ பிங் என்ற 24 வயதுடைய இளைஞரே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டார். மேற்படி இளைஞர் சீனாவின் தென்பகுதியிலுள்ள நான்னிங் நகரத்திற்கு தொழில் தேடி சென்றார். அங்கு பல இடங்களில் தொழில்தேடி திரிந்தும் தொழில் எதுவும் கிடைக்காததால் இந்த விபரீத போராட்டத்தில் அவர் ஈடுபட்டார்.
பல மணி நேர போராட்டத்தின் பின்னர் பொலிஸாரும் தீயணைப்பு படையினரும் இணைந்து அவ்விளைஞனை மீட்டுள்ளனர்.
அந்த இளைஞன் தான் தங்கியிருந்த கொள்கலன் அறையின் கூரைக்கு தீயை வைத்துவிட்டு கூரையில் ஏறி பொருட்களை உடைத்ததுடன் கத்தியால் காயப்படுத்திக்கொண்டார் என அயலவர் தெரிவித்துள்ளார்.
அந்த இளைஞன் இருந்த இடத்தில் இரத்தம் அதிகமாக கசிந்து இருந்தது. ஆனால் அவர் உயிர்பிழைத்துக்கொண்டார். என தீயணைப்பு படைப்பிரிவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
anban Sunday, 04 March 2012 12:59 AM
மன உளைச்சலின் விபரீதம்.
Reply : 0 0
SAMOOHAN Sunday, 04 March 2012 04:28 AM
நமது நாட்டிலும் நடக்கும் இன்னம் கொஞ்சம் சொனக்கணும்.
Reply : 0 0
rahumathulla Sunday, 04 March 2012 12:17 PM
The result of frustration . I regret very much !
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago