2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

தண்ணீர் குழாய் உடைந்ததால் கடும் குளிரில் அரை நிர்வாணமாக நின்ற குழாய் திருத்துநர்

Kogilavani   / 2012 மார்ச் 01 , பி.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

தண்ணீர் குழாய் உடைந்து தண்ணீர் பீய்ச்சியடித்ததால், குழாய் திருத்துநர் ஒருவர் உறைபனி நிலையிலான கடும் குளிருக்கு மத்தியில் உள்ளாடைகளுடன் மாத்திரம் வீதியில் நிற்க வேண்டியேற்பட்ட சம்பவமொன்று சீனாவில் இடம்பெற்றுள்ளது.

யே லீ எனும் 41 வயதுடைய நபரே  சீனாவிந் நின்க்போ நகரில் இந்நிலைமையை எதிர்கொண்டார்.

நீர் செல்லும் குழாயின் மீது அவரின் டிரக் வாகனம் மோதியதால் குழாய் உடைந்து தண்ணீர் பீய்ச்சியடித்துள்ளது.

இதனால் மேற்படி நபர் அணிந்திருந்த தண்ணீர் புகாத ஆடைகளுடன் அவரால் அவ்விடத்தில் நிற்க முடியவில்லை.

இறுதியில் அந்தஆடையை களைந்துவிட்டு உள்ளாடையுடன் மாத்திரம் நின்று உடைந்த குழாயை சீராக்க தீர்மானித்தார்.

அப்போது அப்பகுதி சூழல் வெப்பநிலை -4 பாகை செல்சியஸாக இருந்தது. கடும் குளிரில் யே லீ திணறிக்கொண்டிருந்த நிலையில் அவரின் சகாக்கள் வாகனங்களிலிருந்த ஹீட்டர்களை பயன்படுத்தி அவரை சூடாக்கிக் கொண்டிருந்தனர்.

10 நிமிடங்கள்தான். ஆனால்- 4 பாகை வெப்பநிலை மிக குளிராக இருந்தது என யே லீ கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .