2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை

காதலரின் புதிய காதலியின் காரை உடைப்பதற்காக சிறுவர்களுடன் பாலியல் உறவுகொண்ட பெண் கைது

Kogilavani   / 1999 நவம்பர் 15 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தனது காதலர் மற்றொரு பெண்ணுடன் தொடர்பை ஏற்படுத்தியதால் ஆத்திரமடைந்த 5 பிள்ளைகளின் தாயான பெண்ணொருவர், புதிய காதலியின் காரை உடைத்து சேதப்படுத்தியமைக்குப் பரிசாக இரு சிறுவர்களுடன் பாலியல்  உறவு கொண்டதாக பிரித்தானிய நீதிமன்றமொன்றில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் மேற்குப் பகுதியை சேர்ந்த திவினா டிராவி எனும் 42 வயதுடைய இப்பெண், 13 மற்றும் 14 வயதுடைய சிறுவர்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

மேற்படி பெண்ணின் காதலர் ஸ்டேஷி ஓல்ரைட் எனும் மற்றுமொரு பெண்ணுடன் தொடர்பை கொண்டதால் ஸ்டேஷியின்  காரை சேதப்படுத்துமாறு இச்சிறுவர்களிடம் அப்பெண் கோரியுள்ளார்.

இந்நடவடிக்கைக்கு சன்மானமாக தன்னுடன் பாலியல் உறவு கொள்வதற்கு வாய்ப்பளிப்பதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

கடந்த 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஸ்டேசி ஓல்ரைட்டின் காரை அடித்து நொருக்கியதன் அதனை நிரூபிப்பதற்காக காரின் இலக்கத்தகடை கொண்டுவந்து திவினாவிடம் காண்பித்தனர்.

தனது ஒப்பந்தத்தின்படி நடக்கத் தீர்மானித்த திவினா, அச்சிறுவர்களை ஒருவர் பின் ஒருவராக தனது வீட்டிற்கு அழைத்து பாலியல் உறவு கொண்டுள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.

இச்சந்தர்ப்பத்தில் அப்பெண்ணின் பிள்ளைகள் வீட்டில் இருந்திருக்கவில்லை. அப்பிள்ளைகளில் இருவர் இச்சிறுவர்களின் வயதையொத்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த சிறுவர்களுடன் பாலியல் உறவுகொண்டதன் பின்னர் மேற்படி சிறுவர்கள் இருவரையும் வெளியில் துரத்தியுள்ளார். ஆனால் பின்னர், அவர் சிறுவர்கள் பாடசாலையில் இருக்கும்போது கையடக்கத்தொலைபேசி மூலம்  குறுந்தகவல் அனுப்புவதனூடாக தொடர்பை பேணியுள்ளார்.

மேற்படி சிறுவர்களில் ஒருவருடன் தொலைபேசி அழைப்பு அல்லது குறுந்தகவலினூடாக சில மாதகாலத்தில் 548 தடவைகள் தொடர்புகொண்டுள்ளார் என நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த அறிந்த அச்சிறுவர்களில் ஒருவரின் சினேகிதி பாடசாலையைச் சேர்ந்த சமூக சேவகர் ஒருவரிடம் விடயத்தை கூறுவதற்கு உற்சாகப்படுத்தியுள்ளார். அதன்பின்னரே பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு திவினா கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேற்படி சிறுவர்கள் தினமும் குறித்த பெண்ணின் வீட்டுக்கு சென்று மது அருந்துதல், புகைப்பிடித்தல் என்பவற்றில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்த குழுவொன்றைச் சேர்ந்தவர்கள் என நீதிமன்றில் வழக்குரைஞரான ஸ்டீபன் டென்ட் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்திலேயே தனது காதலரின் புதிய காதலியின் காரை சேதப்படுத்துவதற்கு இச்சிறார்களில் இருவரை பயன்படுத்தியுள்ளார் எனவும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.

சிறார்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டமை தொடர்பாக திவினாவின் மீது 3 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0

  • riswan Thursday, 16 February 2012 12:38 AM

    காதல் விபச்சாரத்தை ஊக்குவிக்கிறது என்பதற்கு இதை விட என்ன ஆதாரம் வேண்டும். சீர்கெட்ட கலாச்சாரம்.... காதலர் தினமும் தடைசெய்யப்பட வேண்டும்.

    Reply : 0       0

    msm fashry Thursday, 16 February 2012 07:00 PM

    இதுதான் மேற்கின் நாய் கரீகம் .....

    Reply : 0       0

    செம்பகம் Friday, 17 February 2012 09:51 PM

    இது தான் மேற்குலக காமதாண்டம். என்னவோ இப்படியெல்லாம் தாண்டபமாடுது காமம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .