2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

மிகப்பெரிய மார்பகங்களுக்கான விருது வென்றபெண்ணுக்கு தொடர்ந்தும் மார்பகங்கள் வளர்வதால் அச்சம்

Kogilavani   / 2012 பெப்ரவரி 13 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

பிரிட்டனில் இயற்கையான மிகப்பெரிய மார்பகங்களைக் கொண்ட பெண்ணாக அறிவிக்கப்பட்டவர் தனது மார்பகங்கள் தொடர்ந்து வளர்ச்சிடையந்துக்கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளார். இந்த வளர்ச்சியினால் தான்  அச்சமடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ரசெல் அல்டனா எனும் 24 வயதான இப்பெண்,  2007 ஆம் ஆண்டு பிரிட்டனில் மிகப்பெரிய இயற்கை மார்பகங்களைக் கொண்ட பெண் என்ற விருதினை வென்றவர். அதன்பின் அவரின் மார்பகங்கள் மேலும் பெருத்துவிட்டன.

இதனால் பயங்கரமான முதுகுவலியால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால், இதனை குறைப்பதற்கு சத்திர சிகிச்சை செய்துகொள்வதற்கு தான் அஞ்சுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 'சத்திரசிகிச்சைக்கு நான் அச்சமடைந்துள்ளேன். ஆனால் இவை இவ்வாறு வளர்ச்சியடைந்தால் நான் அதுபோல் எதையாவது செய்ய வேண்டி வரும். இந்த வளர்ச்சி குறித்து மிகவும் அச்சமடைந்துள்ளேன்' என 5 அடி 6 அங்குல உயரம் கொண்ட அப்பெண் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய தாய்க்கு இவ்வாறு மிகப்பெரிய மார்பகங்கள் இருந்தது எனவும் அவர் சத்திரிசிகிச்சையினூடாக அதனை சிறிதாக்கிக் கொண்டதாகவும் அப்பெண் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த வளர்ச்சிக்கு என்ன காரணம் என மருத்துவர்கள் கண்டறியவில்லையாம். 'பல வருடங்களுக்கு முன்னரே இவ்வளர்ச்சி நின்றிருக்க வேண்டும்' என மருத்துவர்கள் கூறுகின்றனர். இன்னும் வளர்வதற்கு என்ன காரணம் என ஒருவருக்கும்  தெரியவில்லை.

இது இயற்கையாக தோற்றமளிக்கவில்லை. எனக்கு தொடர்ச்சியாக வலி ஏற்படுகிறது. முதுகுவலிக்காக மசாஜ் செய்துகொள்ள வேண்டியுள்ளது' என அவர் கூறியுள்ளார்.

ரசெல் 2007 ஆம் ஆண்டுடில் மேற்படி விருதை வென்றபின் 2008 ஆம் ஆண்டு டொன்னா ஜோன்ஸ் எனும் பெண் முதலிடம் பெற்றார். எனினும் ரசெல்லின் மார்பகம் இதேவேகத்தில் வளர்ச்சியடைந்தால் அவர் இன்னும் ஒரு வருடத்தில் டொன்னாவை விஞ்சிவிடுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை தனது காதலர் தனக்கு உதவியாக இருப்பதாகவும் அவர் ஒருபோதும் இப்பெரிய மார்பகங்களை பிரச்சினையாக கருதவில்லை எனவும் ரசெல் அல்டனா கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0

  • hisfullah khan Tuesday, 14 February 2012 08:10 AM

    ஏன் இந்த கேடுகட்ட வாழ்கை செக்ஸ்

    Reply : 0       0

    m jaleel/kwt Tuesday, 14 February 2012 08:12 PM

    இந்த கொலை வெறி எதற்கு?

    Reply : 0       0

    kamal Thursday, 16 February 2012 03:47 AM

    paarka parithabama irukku

    Reply : 0       0

    Reemco Thursday, 16 February 2012 05:59 PM

    @hisfullah, உமக்கு கமெண்ட் கொடுக்கத் தெரியாவிட்டால் போத்திக்கிட்டு இரு. மார்பகம் வளர்வது அவள் தவறா? செக்ஸ் கேடுகெட்ட வாழ்க்கையா?

    Reply : 0       0

    lavanas Saturday, 18 February 2012 05:15 PM

    இது கேடுகெட்ட வால்கயுமில்லை செசுமில்லை.இது இயற்கை.இந்த பெனுக்காஹா பரிடாபாப்படுங்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .