Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Super User / 2012 பெப்ரவரி 11 , பி.ப. 01:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரிட்டனிலுள்ள பல்கலைக்கழகமொன்று கழிவறைகளை பயன்படுத்தும் முறை குறித்து தனது மாணவர்களுக்கு சுவரொட்டி மூலம் பாடம் நடத்துகிறது.
வேல்ஸ் பிராந்தியத்திலுள்ள ஸ்வான்ஸீ பல்கலைக்கழகமே 18 வயது கடந்த மாணவர்களுக்கு இவ்வாறு பாடம் நடத்துகிறது. ஆண், பெண் இருபாலாரின் கழிவறைகளிளும் பல்கலைக்கழகத்தின் முக்கிய இடங்கள் பலவற்றிலும் இச்சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
வெளிநாடுகளிலிருந்து வரும் மாணவர்கள் பலர் மேற்கத்தேய கழிவறைகளை பயன்படுத்துவதற்குத் தெரியாதவர்களாக இருப்பதே இதற்குக் காரணம் என பல்கலைக்கழக நிர்வாகம் கூறியுள்ளது. இப்பல்கலைக்கழத்தில் சுமார் 18000 மாணவர்கள் கல்வி கற்கின்றமை குறிப்பிடத்தக்கது.
கழிவறையில் அமரும் முறை, கழிவறை கடதாசிகள், ஆரோக்கிய துவாய்கள், கைதுடைக்கும் துவாய்களை பயன்படுத்தியபின் என்ன செய்வது என்பன போன்ற விளக்கங்கள் இச்சுவரொட்டிகளில் உள்ளன.
கழிவறைகளை முறையாக பயன்படுத்தப்படாமை குறித்து பல புகார்கள் வந்ததால் இந்நடவடிக்கை இந்த அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கலாசார வேறுபாடுகள் துரதிஷ்டவசமாக சுகாதார விடயங்களில் பாதிப்பை ஏற்படுத்துவதால் இச்சுவரொட்டிகள் தயாரிக்கப்பட்டதாக பல்கலைககழக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதையடுத்து நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
எனினும் இச்சுவரொட்டிகளுக்கு சிலர் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்.
'பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகுவதற்கு நாம் உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்றிருக்க வேண்டும். ஆனால் எமக்கு மலசலக்கூடத்தை எப்படி பயன்படுத்துவது எனத் தெரியாதா?' என சட்டத்துறை மாணவியான ஸ்டெபானி பீரிடி கூறியுள்ளார்.
'இச்சுவரொட்டிகள் ஜோக் அல்ல என உணரும்வரை இதை வேடிக்கையானதாக கருதினோம்' என ஹன்னா புரோஸர் என்பவர் கூறியுள்ளார்.
கழிவறைகளை பயன்படுத்துவது எப்படி? மாணவர்களுக்கு பாடம் நடத்தும் பல்கலைக்கழகம்
பிரிட்டனிலுள்ள பல்கலைக்கழகமொன்று கழிவறைகளை பயன்படுத்தும் முறை குறித்து தனது மாணவர்களுக்கு சுவரொட்டி மூலம் பாடம் நடத்துகிறது.
வேல்ஸ் பிராந்தியத்திலுள்ள ஸ்வான்ஸீ பல்கலைக்கழகமே 18 வயது கடந்த மாணவர்களுக்கு இவ்வாறு பாடம் நடத்துகிறது. ஆண், பெண் இருபாலாரின் கழிவறைகளிளும் பல்கலைக்கழகத்தின் முக்கிய இடங்கள் பலவற்றிலும் இச்சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
வெளிநாடுகளிலிருந்து வரும் மாணவர்கள் பலர் மேற்கத்தேய கழிவறைகளை பயன்படுத்துவதற்குத் தெரியாதவர்களாக இருப்பதே இதற்குக் காரணம் என பல்கலைக்கழக நிர்வாகம் கூறியுள்ளது. இப்பல்கலைக்கழத்தில் சுமார் 18000 மாணவர்கள் கல்வி கற்கின்றமை குறிப்பிடத்தக்கது.
கழிவறையில் அமரும் முறை, கழிவறை கடதாசிகள், ஆரோக்கிய துவாய்கள், கைதுடைக்கும் துவாய்களை பயன்படுத்தியபின் என்ன செய்வது என்பன போன்ற விளக்கங்கள் இச்சுவரொட்டிகளில் உள்ளன.
கழிவறைகளை முறையாக பயன்படுத்தப்படாமை குறித்து பல புகார்கள் வந்ததால் இந்நடவடிக்கை இந்த அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கலாசார வேறுபாடுகள் துரதிஷ்டவசமாக சுகாதார விடயங்களில் பாதிப்பை ஏற்படுத்துவதால் இச்சுவரொட்டிகள் தயாரிக்கப்பட்டதாக பல்கலைககழக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதையடுத்து நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
எனினும் இச்சுவரொட்டிகளுக்கு சிலர் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்.
'பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகுவதற்கு நாம் உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளை பெற்றிருக்க வேண்டும். ஆனால் எமக்கு மலசலக்கூடத்தை எப்படி பயன்படுத்துவது எனத் தெரியாதா?' என சட்டத்துறை மாணவியான ஸ்டெபானி பீரிடி கூறியுள்ளார்.
'இச்சுவரொட்டிகள் ஜோக் அல்ல என உணரும்வரை இதை வேடிக்கையானதாக கருதினோம்' என ஹன்னா புரோஸர் என்பவர் கூறியுள்ளார். (டெய்லி மெயில்)
Kethis Sunday, 12 February 2012 04:00 AM
மேற்குலகின் வேறு பல்கலைக்கழகங்களிலும் வெளிநாட்டு மாணவர்களுக்காக இப்படி மலசலக்கூட பாடம் நடத்தப்படுவது குறித்து கேள்விப்பட்டுள்ளேன்.
Reply : 0 0
UMMPA Wednesday, 15 February 2012 03:02 PM
இது கட்டாயம் சொல்லிகொடுக்க வேண்டும். ஏனென்றால் புரியுதா நமது நாட்டு மிகவும் படித்தவர்கள் கூட இப்படியான தெரியாத்தனமாக ஏறி நின்று விழுந்தவர்களும் இருக்கிறார்கள். நமது பக்கத்துக்கு நாட்டுகாரர்கள் இந்த விடயத்தில் மிகவும் குறைந்தபட்ச அறிவு உள்ளவர்கள். இது எல்லாருக்கும் வழிகாடியாக இருக்கட்டும்.
Reply : 0 0
meenavan Wednesday, 15 February 2012 08:46 PM
இந்த மாதிரியான அறிவுறுத்தல்களை நமது நாட்டிலும் பொது கழிவறைகள் உள்ள இடங்களில் விளம்பரப்படுத்துவது நல்லது.
Reply : 0 0
lavanas Saturday, 18 February 2012 05:22 PM
நாங்கள் எங்கள் வைத்தியசாலையில் ஆறு வருடங்களுக்கு முன்னரே நடைமுறை படுத்தியிருக்கிறோம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago