Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Kogilavani / 2012 பெப்ரவரி 11 , பி.ப. 06:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீனாவிலுள்ள சேவலொன்று முட்டையிடுவது விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் மூழ்கவைத்துள்ளது. இதற்கான காரணம் என்னவென்று அறிய தற்போது அவர்கள் ஆய்வுகளைத் தொடங்கியுள்ளனர்.
சீனாவின் அன்ஹுய் மாகாணத்தில் உள்ள சுமியோ கிராமத்தில் வசிக்கும் ஹுவாங் லீ (வயது 47) என்பவர் வளர்த்துவந்த சேவலே இவ்வாறு முட்டையிடத் தொடங்கியுள்ளது.
இவர் தனது கோழிப் பண்ணையில் 7 கோழிகளையும் ஒரு சேவலையும் வளர்த்து வந்துள்ளார். குளிர்காலத்தின்போது கோழிகள் அனைத்தையும் இவரின் குடும்பத்தினர் சமைத்து உண்டு விட, இந்த சேவல் மட்டும் எஞ்சியுள்ளது. இச்சேவல் தற்போது முட்டை ஈனுகிறதாம்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில், 'மாரி காலத்தில் கோழிகள் அனைத்தையும் சமைத்து விட சேவல் மட்டுமே எஞ்சியிருந்தது. ஒருநாள் கோழிக்கூட்டைச் சென்று பார்க்கையில் அங்கு சேவலுக்கருகில் முட்டை இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தேன்.
அயலவர்கள் யாரும் வேடிக்கைகாக முட்டையை கொண்டு வந்து சேவலுக்கருகில் போட்டிருக்கலாமென நான் நினைத்தேன். ஆனால் அடுத்தநாள் இன்னுமொரு முட்டையும் இருந்தது. அதனால் நான் மூன்றாவது நாள் கோழிக் கூட்டுக்கருகில் காத்திருந்தேன். ஆச்சர்யப்படும் வகையில் அச் சேவல் முட்டையிட்டது' எனக் கூறியுள்ளார்.
இத்தகவல் தொலைக்காட்சிகள் மூலம் எல்லா இடங்களுக்கும் பரவியதையடுத்து, உள்நாட்டு விவசாயத்துறை அமைச்சின் விஞ்ஞானிகள் எனது சேவலை பரிசோதனைக்காக வாங்கிச் சென்றுள்ளனர்.
அது சேவலைப் போன்று தோற்றமளிக்கும் கோழியா அல்லது அனைத்து கோழிகளும் இறந்தபின் அச்சேவல், கோழியாக மாறிவிட்டதா என விஞ்ஞானிகள் ஆராய விரும்புகிறார்கள் என ஹவாங் லீ கூறியுள்ளார்.
'என்னைப் பொறுத்தவரை அது ஏனைய சேவல்களைப் போன்றே காலையில் எழுந்து கூவும். ஏனயை கோழிகளுடன் அது சேவல் போன்றே நடந்துகொண்டது' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
neethan Sunday, 12 February 2012 07:39 AM
காலையில் கூவும் சேவல் மூன்று முட்டைகள் தான் இட்டதா? விஞ்ஞானிகளது கையில் சிக்கியதும் சேவல் முட்டை இடுவதை நிறுத்தி....விட்டதா?
Reply : 0 0
muslim Sunday, 12 February 2012 04:43 PM
அவன் இன்றி ஒரு அணுவும் அசைவதில்லை. யாவும் இறைவன் நாட்டப் பிரகாரமே நாடக்கும். இறைவனின் வல்லமை உணர்த்தும் நிகழ்வு. இறைவனின் ஆட்டலுக்கு முன்னால் விஞ்ஞானம் வாயில் விரலை வைக்கின்றது.
Reply : 0 0
faroos Sunday, 12 February 2012 11:06 PM
நாடியதை நடத்துவான் வல்லமையாளன். இதை அரியதோர் அறியும் படியும் செய்பவன் அவனே!
Reply : 0 0
ummpa Monday, 13 February 2012 02:09 PM
இதில் ஆராய்ந்து பார்பதக்கு ஒன்றும் பெரிய விடயமில்லை. ஆதம் ஏவாள். ஏவாள் ஆதம் அவர்களின் விலா எலும்பில் இருந்துதான் பிறந்தார்கள். ஆகவே இதுவெல்லாம் சாத்தியம். சூரியன் மேற்கில் உதிக்கும் வரை பார்த்துக்கொண்டு இருப்போம்.
Reply : 0 0
hameed Monday, 13 February 2012 07:05 PM
இதெல்லாம் படைத்தது ஆட்சி நடதுபவனின் வேலை இதில் ஒன்றும் விஞ்ஞானம் இல்லை.
Reply : 0 0
Mohd Elyas Tuesday, 14 February 2012 06:04 AM
சேவல் முட்டை இட்டதற்கு ஆச்சரியப்படுகிறார்களா? ஆண் ஒருவர் லண்டனில் குழந்தை பிரசவித்துள்ளார்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago