Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Kogilavani / 2012 பெப்ரவரி 10 , பி.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆஸ்திரியாவிலுள்ள விபசார விடுதியொன்று வீடற்றவர்களுக்கு தனது அறைகளை இலவசமாக வழங்கியுள்ளது.
வியன்நா நகரிலுள்ள லாபஸ் என்றழைக்கப்படும் இவ்விலைமாதர் இல்லத்தின் உரிமையாளரான பீற்றர் லஸ்கரிஸ், ஐரோப்பாவில் தற்போது நிலவும் கடும் குளிரான கால நிலையை கருத்தில் கொண்டு இத்தகைய ஏற்பாட்டை செய்துள்ளார்.
இதனால் இந்த விபசார விடுதியின் வாசலில் பலர் வரிசையில் காத்திருகின்றனர்.
இவ்வாறு உள்நுழையும் 10 பேருக்கு ஓர் இரவு தங்குவதற்கு இலவச கட்டில் வழங்கப்படுகிறது. அத்துடன் சூடான நீரில் இலவசமாக குளிப்பதற்கான வசதியும் உள்ளது. பசியாறுவதற்கு சூடான உணவும் இலவசமாக இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் ஏனைய சேவைகள் இதில் உள்ளடக்கப்படவில்லை என பீற்றர் லஸ்கரிஸ் தெரிவித்துள்ளார்.
'இந்த இலவச சேவையானது மிகவும் பிரபல்யமடைந்துவிட்டது. அதனால் வியன்னாவில் உள்ள ஏனைய விபசார இல்லங்களையும் உறவிடமற்றவர்களுக்காக திறந்துவைப்பது தொடர்பில் கலந்துரையாடியுள்ளேன்' என லஸ்கரிஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
'நாங்கள் இந்த குளிர் காலநிலையால் அதிக அளவில் வியாபாரம் செய்யவில்லை. அத்துடன் இது பாடசாலை விடுமுறை காலமாகும். அதிகமான மக்கள் அவர்களது குடும்பத்துடன் வெளியிடங்களுக்கு சென்றுவிட்டனர்.
எங்கள் விபசார விடுதியில் அதிகமான அறைகள் வெறுமையாக காணப்படுகின்றன. இதனை நல்ல காரியங்களுக்காக பயன்படுத்தாமல் விடுவது அவமானகரமானதாகும். இந்த குளிரான காலநிலையில் ஒருவரும் தெருவில் விட்டுவைக்கப்படலாகாது.
ஒவ்வொரு அறைகளிலும் ஒவ்வொரு கட்டில்கள் உள்ளன. மற்றும் தனியான சவர் உள்ளது. ஒவ்வொரு விருந்தினரும் ஒவ்வொருநாளும் படுக்கை துணிகளையும் சுத்தம் செய்துகொள்ளடிமுடியும்.
மேற்படி 10 அறைகளையும் வீடற்றோருக்காக ஒதுக்கும்படி எனது ஊழியர்களிடம் கூறியுள்ளேன். இந்த குளிரில் ஒருவரும் வெளியில் தங்க விரும்பமாட்டார்கள்.
இவ்விடுதியில் வீடற்றோருக்கான அறைகள் நிரம்பி வழிகின்றன. 10 அறைகளை இதற்கு ஒதுக்கிவிட்டதால் மேலும் 5 அறைகள் மாத்திரமே விபசாரத்திற்கு உள்ளன. அவற்றில் வியாபாரம் வழமைபோல் இடம்பெறுகிறது.
இந்த விபசார விடுதியில் எனது விபசார மங்கைகள் எவரும் இதுவரை எந்த முறைப்பாடுகளையும் செய்யவில்லை. அவர்கள் அனைவரும் வீடற்றவர்களிடம் அனுதாபத்துடன் பழகுகின்றனர்' எனத் தெரிவித்துள்ளார்.
MADURANKULI KURANKAAR Monday, 13 February 2012 07:54 PM
போங்கொங்கே நீங்கள் ரொம்ப பறந்த மனப்பான்மை உள்ளவர்.
Reply : 0 0
Emthawfeek- Musali Sunday, 19 February 2012 04:39 PM
வர்த்தக யுக்தியா மலிவான மாதரா?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago