Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Kogilavani / 2012 பெப்ரவரி 09 , பி.ப. 02:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீனாவில் உள்ள மிருகக்காட்சி சாலையொன்று காதலர் தினத்தில் செம்மறி ஆடொன்றுக்கும் மான் ஒன்றுக்கும் திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
சீனாவின் தென்மேற்குப் பகுதியிலுள்ள குன்மிங் நகரில் அமைந்துள்ள யுனான் மிருகக்காட்சி சாலையிலே இந்த விநோத திருமணத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேற்படி மிருகக்காட்சிசாலையின் பராமரிப்பாளர் ஒருவர் இது குறித்து தெரிவிக்கையில், சுன்ஸி என பெயரிடப்பட்ட பெண் மானும் சாங்மோ என பெயரிடப்பட்ட ஆண்; செம்மறி ஆடும் எப்போதும் ஒன்றிணைந்தே இருக்கும். அவற்றை பிரிக்க முடியாது. அவை இரண்டும் ஒன்றையொன்று மிகவும் நேசிக்கின்றன' எனக் கூறினார்.
இந்த இரு மிருகங்களையும் பிரிப்பதற்கு ஒரு தடவை ஊழியர்கள் முயற்சித்தனர். அப்போது பெண் மான் ஆட்டுடன் மீண்டும் இணையும் முயற்சியில் வேலியில் மாட்டிக்கொண்டதால் மேற்படி ஆடு கடும் ஆவேசமடைந்ததாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
'ஆரம்பத்தில், நாங்கள் அவை இரண்டையும் பிரிப்பதா வேண்டாமா என பெரும் குழப்பத்தில் இருந்தோம். ஆனால் அவை இரண்டின் ஈர்ப்பு தன்மையும், உண்மையான காதலும் எங்களது எண்ணத்தை மாற்றிவிட்டது' எனவும் மேற்படி மிருகக்காட்சிசாலையின் முகாமையாளர் லீ லீ தெரிவித்துள்ளார்.
'தற்போது நாங்கள் அவ்விலங்குகள் இரண்டிற்கும் திருமணம் செய்து வைக்கவுள்ளோம். இந்த திருமண நிகழ்வை பார்வையிடுபவர்களுக்காக 500 டிக்கட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதேவேளை, இத்திருமணத்தையொட்டி டீசேர்ட், கோப்பைகள் முதலான நினைவுப் பொருட்களும் விநியோகிப்பதற்கு தயார் படுத்தப்பட்டுள்ளன' எனவும் அவர் தெரிவித்தார்.
Ullam Friday, 10 February 2012 03:56 AM
லூஸ் கேஷ்.......!!
Reply : 0 0
ala Saturday, 11 February 2012 11:02 PM
மனிதர்களில் அப்படியே போகட்டும் ..
Reply : 0 0
riswan Tuesday, 14 February 2012 08:05 PM
இது ஆட்டுக்கும் மானுக்கும் தெரியுமா? தெரிஞ்சால் ஆடும் மானும் சிரிக்கும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago