Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை
Kogilavani / 2012 ஜனவரி 30 , பி.ப. 06:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
இத்தாலியில் இடம்பெறவுள்ள நகர சபை தேர்தலில் ஆபாச பட நடிகைகள் இருவர், மேயர் பதவிக்காக ஒருவரையொருவர் எதிர்த்து போட்டியிடுவதால் இத்தேர்தல் பெரும் பரபரப்பை ஏற்படுத்துமென வாக்காளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
அமந்தா பொக்ஸ் மற்றும் லூனா போர்ஜியா ஆகிய இவ்விரு பெண்களும் டிரான்டோ நகர மேயர் பதவிக்கு போட்டியிடுகின்றனர். இத்தேர்தலில் மேற்படி ஆபாச பட நடிகைகளிடம் அவர்களின் ஆண் போட்டியாளர்கள் பெரும்பாலும் கட்டுப்பணத்தை இழப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்படி இரு நட்சத்திரங்களினதும் ஆதரவாளர்கள் வாக்காளர்களை ஈர்ப்பதற்காக இந்நடிகைகள் பங்குபற்றும் 'போல் டான்ஸிங் இரவு களியாட்ட நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்துள்னனர்.
'நாம் நியாயமாக நடந்துகொள்ள விரும்புகிறோம். அதனால் ஏனைய போட்டியாளர்களையும் இந்த நடன நிகழ்ச்சியில் பங்குக்கொண்டு நடனமாடும்படி அழைக்கின்றோம்' என முகவரான மிம்மோ பாவெஸ் ஊடகங்களுக்கு தெரவித்துள்ளார்.
ஆனால் இவ்விருவரில் அமந்தா, தனது கவர்ச்சிக் கலண்டரினூடாக முன்னிலையில் திகழ்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அண்மையில் இவர் வெளியிட்ட கவர்ச்சிக் கலண்டர் பரபரப்பாக விற்பனையாகியது.
'உண்மையான என்னை வாக்காளர்கள் பார்க்க வேண்டுமென நான் விரும்புகிறேன்' என அவர் தெரிவித்துள்ளார்.
shahusu Wednesday, 01 February 2012 03:15 AM
இவங்கட கவர்ச்சி அரசியலையும் விட்டு வைக்கலயா? இவங்க மட்டும் மேயர் ஆயிட்டாங்கன்னா இனி அந்த சமூகமே சீரழிஞ்சு போவது நிச்சயம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago