Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2012 ஜனவரி 09 , பி.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
லண்டன், நியூயோர்க் ,மெக்சிகோ சிட்டி, மட்ரிட் என உலகின் பல நகரங்களின் ரயில்களில் பலர் நேற்று ஞாயிற்றுக்கிழமை தமது காற்சட்டையை கழற்றிவிட்டு உள்ளாடையுடன் பயணம் செய்தனர்.
ஒவ்வொரு வருடமும் புதுவருடத்தையொட்டி இந்த விசித்திர நிகழ்வு பல நகரங்களில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 'காற்சட்டை இல்லாத நாள்' என இது குறிப்பிடப்படுகிறது.
நியூயோர்க்கில் கடந்த 200 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மேற்படி நிகழ்வில் 7 பேர் மட்டுமே பங்குபற்றியிருந்தனர். படிப்படியாக பல நகரங்களுக்கும் இது பரவியது. இம்முறை சுமார் 60 நகரங்களில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
லண்டனில் சுமார் 150 பேர் குளிரையும் பொருட்படுத்தாது இந்நிகழ்வில் பங்குபற்றினர்.
கனடாவின் டொரன்டோ நகரில் 5 ஆவது தடவையாக இந்நிகழ்வு இடம்பெற்றது. இவர்கள் ரயில் நிலையத்திற்கு வழமைபோல் வந்து தமது காற்சட்டைகள், பாவாடைகளை கழற்றிவிட்டு ரயில்களில் ஏறினர். ஏனைய பயணிகளுக்கு மத்தியில் எதுவும் நடவாததைப்போல் இவர்கள் பயணம் செய்தனர்.
இந்நிகழ்வில் பங்குபற்றுவதற்காக உலகெங்கும் 16,000 பேர் தமது பெயரை பேஸ்புக்கில் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
லண்டன் மற்றும் பல பகுதிகளில் 1000 இற்கும் மேற்பட்ட மக்கள் இந்த காற்சட்டை இல்லா நாள் நிகழ்வில் பங்குபற்றியுள்ளனர்.
இந்த நிகழ்வானது பொழுது போக்கு மட்டும் மக்களுக்கு வியப்பை ஏற்படுத்துவதுடன் மக்களை சிரிக்க வைப்பதனூடாக அந்நாளை பிரகாசமிக்கதாக செய்வதை நோக்கமாக கொண்டுள்ளது.
ஆனால் இந்நிகழ்வை ஒவ்வொருவரும் மகிழ்ச்சிமிக்கதாக பார்க்கவில்லை.
மெக்சிகோ சிட்டி நகரைச் சேர்ந்த நபரொருவர் கருத்துத் தெரிவிக்கையில் 'மக்கள் தெருவில் காற்சட்டை, மற்றும் பாவாடைகள் இன்றி அறை நிர்வாணத்துடன் சென்றதை அவதானித்தேன். எனக்கு அது விருப்பமில்லை' என்று தெரிவித்துள்ளார். (படங்கள்-ஏ.எவ்.பி)
PUTTALAM MANITHAN Wednesday, 11 January 2012 04:43 AM
இதில் கலந்து கொள்பவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்படுமா? 2013 இல் நானும் கலந்து கொள்ளத்தான் . ஹி ...ஹி..ஹி.
Reply : 0 0
farhan Sunday, 13 May 2012 09:10 AM
enna koduma
Reply : 0 0
heemra Friday, 13 January 2012 08:57 PM
புகை வண்டிக்குள் கசியாமல் இருந்தால் அதுவே பெரியவிசயம்
Reply : 0 0
Arafath Thursday, 12 January 2012 04:26 PM
நல்ல விளையாட்டு இது சுமா சூப்பரா இருக்கு இலங்கையிலும் இருந்தா இத விட நல்ல இருக்கும் ஹி ஹி ஹி ......
Reply : 0 0
Aathiff Ali Wednesday, 11 January 2012 08:16 PM
என்ன கொடும சரவணன் சார் இது ?????
Reply : 0 0
fajeeth Wednesday, 11 January 2012 06:18 PM
முழு நிர்வாணமாக இருக்க வேண்டி ஆரம்பிக்கும் வேலைத்திட்டத்தின் முதலாவது பகுதி இதுதான். ”டிங்கிடி டிங்காலே மீனாட்சி டிங்கிடி டிங்காலே உலகம் போர போக்கப்பாரு தங்கமே தில்லாலே”
Reply : 0 0
Roshan M Leeds Wednesday, 11 January 2012 03:11 PM
It was fantastic yesterday in London- could see many sizes with varius shapes ....
For your information : in 2013 it would be no touser , no t shirt
in 2014 it would be no trouser, no t shirt, no brassiers.
in 2015 it would be no trouser, no t shirt, no brassier, no underwear
in 2016 it would be no, trouser, no t shirt, no brassier, no underwear but eating grass like buffaloes and running like dogs in the London tubes.
Reply : 0 0
s.cheliyan Wednesday, 11 January 2012 10:01 AM
ஆடை இல்லாதவன் அரை மனிதன் இவர்கள் ஆடை குறைந்த குறை மனிதர்கள் ... பூமியின் பூச்சாண்டிகள் ..
Reply : 0 0
ROSHANHILMEE Wednesday, 11 January 2012 05:08 AM
சார் இச்சட்டத்தை இலங்கையில் கட்டாய சட்டமாக்க முடியாதா?
Reply : 0 0
ROSHANHILMEE Wednesday, 11 January 2012 04:48 AM
இப்படி உள்ளாடையுடன் செல்லும் பயணத்தை கட்டாய சட்டமாக ஆக்க முடியாதா ?ஹி....ஹி...ஹி...ஹீ..
Reply : 0 0
Ranja Tuesday, 10 January 2012 03:25 PM
நல்ல காலம் அதையும் கழட்டிட்டு பயணம் செய்ற மாதிரி நிகழ்வு வைக்காம விட்டிட்டாங்க.
Reply : 0 0
MADURANKULI KURANKAAR Wednesday, 11 January 2012 03:23 AM
இது தான் இவர்களின் நாகரிகமா? 2013 இல் அதையும் கழட்டிவிட்டு பயணம் செய்கிற மாதிரி ஏற்பாடு செய்யுங்கள் அய்யா. ஆனால் இலங்கையில் மட்டும் வேண்டவே வேண்டாம் சாமி.
Reply : 0 0
Nazeer Tuesday, 10 January 2012 11:21 PM
இவர்கள்தான உலகிற்கு நாகரீகம் படிப்பிப்பவர்கள் ?
Reply : 0 0
suthan Tuesday, 10 January 2012 10:42 PM
பாவம் ஒரு நாள் தானே விடுங்கள். எல்லோருக்கும் ஒரு ரிலாக்ஸ் ஆக இருக்கட்டும்....ஹி..ஹி ..ஹி
Reply : 0 0
janoovar Tuesday, 10 January 2012 09:22 PM
இச்சட்டம் இலங்கையில் மட்டும் வேண்டாம். அந்த கொடுமையை தாங்க முடியாது.
Reply : 0 0
Rajeen Tuesday, 10 January 2012 09:03 PM
Iyo kadavulthan kappathanum Ithu nalla ella.
Reply : 0 0
jamaldeen Tuesday, 10 January 2012 06:11 PM
நாங்கள் எமது மூதாதையர் போலே வாழ போகிறோம்.
Reply : 0 0
Miyad Tuesday, 10 January 2012 04:14 PM
All stupid
Reply : 0 0
mauzook Tuesday, 10 January 2012 04:09 PM
இன்னும் கொஞ்சம் காலத்தில் உள்ளாடை இல்லாமல் வாரப்போகிறாங்க.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago