2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

மார்பகத்தை பெரிதாக்குவதற்காக, பணியாற்றும் வங்கியில் கொள்ளையடித்த பெண்

Kogilavani   / 2012 ஜனவரி 05 , பி.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மார்பகத்தை அழகுபடுத்திக் கொள்வதற்கான சத்திர சிகிச்சையை மேற்கொள்வதற்காக தான் பணியாற்றும் வங்கியிலேயே பணத்தை கொள்ளையடித்த ஜேர்மனிய பெண்ணொருவர் 15 வருட சிறைத்தண்டனையை எதிர்கொண்டுள்ளார்.

23 வயதான மன்டி லோரன்ஸ் என்ற பெண்ணே இவ்வாறான சிறைத் தண்டனையை எதிர்கொண்டுள்ளார்.

இவர் தனது மார்பகத்தை பெரிதாக்கிக் கொள்வதில் அதிக ஆர்வத்துடன் இருந்தார். ஆனால் அதற்கான சத்திரசிகிச்சைக்கு  அவரிடம் போதிய பணமிருக்கவில்லை.

இதனால் தான்  தொழில் புரிந்த வங்கியில் பணத்தை கொள்ளையிட்டு மார்பக சத்திர சிகிச்சையை மேற்கொள்ள அவர் திட்டமிட்டார்.

இதற்காக கொள்ளை நாடகமொன்றை அப்பெண் அரங்கேற்றினார்.

வேர்ல் நகரில் உள்ள மேற்படி வங்கியில் குறித்த பெண் தானும் 3 பயிலுநர்களும் மாத்திரம் கடமையில் இருக்கும் நேரத்தில் கொள்ளையொன்றை நடத்துவதற்கு ஏற்பாடு செய்ததாக நீதிமன்றமொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்கொள்ளைக்காக  3 ஆண்களை அப்பெண் ஏற்பாடு செய்ததாகவும் குறித்த நேரத்தில் தொலைபேசி குறுந்தகவலினூடாக மேற்படி கொள்ளையர்களுக்கு சமிக்ஞை கொடுத்ததாகவும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.

குறித்த அடியாட்கள் துப்பாக்கி, கத்தி முதலான ஆயுதங்களுடன் வங்கிக்குச் சென்று மேற்படி பெண்ணை அச்சுறுத்தவதை போன்று நடித்து, 95,000 யூரோ பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

இச்சம்பவத்தால் தான் அதிர்ச்சியடைந்ததாக பொலிஸாரிடம் தெரிவித்த அப்பெண்  அதேநாளில், பிளாஸ்திக் சத்திரசிகிச்சை நிபுணரை தொடர்புக் கொண்டு மார்பகத்தை அழகாக்குவதற்கான சிகிச்சையை மேற்கொள்வதற்கு ஏற்பாடு செய்தார்.

அப்பெண் கூறிய கதையில் ஏதோ மர்மம் இருப்பதாக சந்தேகித்த  குற்றப்புலனாய்வுப் பிரிவினர், அப்பெண்ணை கண்காணித்து வந்தனர். பின்னர் அப்பெண் கைது செய்யப்பட்டாள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .