Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2012 ஜனவரி 03 , பி.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரான்ஸில் மார்பக அழகு சிகிச்சைகளுக்கு தவறான சிலிக்கன் பைகளை தயாரித்து விற்பனை செய்த நிறுவனத்தின் ஸ்தாபகர் முன்னாள் இறைச்சிக் கடைக்காரர் என பிளாஸ்திக் சத்திரசிகிச்சை நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜீன் குளோட் மாஸ் எனும் நபர் 1991 ஆம் ஆண்டு பி.ஐ.பி. எனும் நிறுவனத்தை ஸ்தாபித்தார். மார்பகத்தை பெரிதாக்கும் சிகிச்சைகளுக்காக இந்நிறுவனம் தயாரித்த சிலிக்கன் பைகள் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிப்பதாகும் என பிரெஞ்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிறுவனத்தின் சிலிக்கன் பைகளை பொருத்திக்கொண்ட 30,000 பிரெஞ்சு பெண்கள் அவற்றை அகற்றிக்கொள்ளும் சத்திர சிகிச்சைக்கு பணம் வழங்கத் தயார் என பிரெஞ்சு அரசாங்கம் தெரவித்துள்ளது.
தற்போது இந்நிறுவனம் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையிலேயே அந்நிறுவனத்தின் ஸ்தாபகர் குறித்த மேற்படி தகவல் வெளியாகியுள்ளது.
இவற்றின் தயாரிப்புகளில் 90 வீதமானவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. குறிப்பாக, தென் அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் இவை அதிகமாக விற்பனையாகியுள்ளது.
தற்போது ஜீன் குளோட் மாஸ் எங்கு உள்ளவர் என்பது குறித்து ஒருவருக்கும் தெரியாது. அவர் தலைமறைவான நபர் என பாரிஸை சேர்ந்த சத்திரசிகிச்சை நிபுணரான பெட்டிரிக் பராப் தெரிவித்துள்ளார்.
'அவர் மருத்துவ பின்னணி ஏதும் கொண்டவர் இல்லை. அவர் மருத்துவ பொறியிலாளரும் அல்லர். அவர் ஓர் இறைச்சி கடைக்காரர். அதன்பின்பே அவர் இந்த தொழிலை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளார்' என டாக்டர் பெட்டிரிக் பராப மேலும் தெரிவித்துள்ளார்.
'பி.ஐ.பி. நிறுவனத்தின் அதிகமான விலையுயர்ந்த மார்பக சிலிக்கான் பைகள் 1,200 யூரோ வீதம் விற்பனையாகியுள்ளன. மிக மலிவானவை 250 யூரோ வீதம் விற்கப்பட்டன. அவர் மிகக் குறைந்த தரமான பொருட்களை மிகக் குறைந்த விலையில் சந்தைப்படுத்தியுள்ளார்' என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பிரெஞ்சு பிளாஸ்திக் சத்திரசிகிச்சையாளர்கள் சங்கத்தின் மார்பக மற்றும் புற்றுநோய் பிரிவின் பேச்சாளர் அல்பிரெட் பிட்டோஸி கருத்துத் தெரிவிக்கையில் மேற்படி நிறுவனத்தின் ஆரம்ப காலத் தயாரிப்புகள் தரமானவையாக இருந்ததென கூறியுள்ளார்.
'2001-2003 காலப்பகுதியில் தயாரிப்புகள் சிறந்ததாக இருந்தன. ஆனால் 2004-2005 ஆம் ஆண்டளவில் சில தயாரிப்புகள் தரம்குறைவான ஜெல்லை கொண்டிருந்தன' என அவர் கூறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago