Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2011 டிசெம்பர் 30 , பி.ப. 06:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனேடிய உணவு விடுதியொன்றில் டொப்லெஸ் கோலத்தில் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறும் ஊழியர்களுக்கு அதிகாரிகள் தடைவிதித்துள்ளனர்.
வாடிக்கையாளர்களை கவர்வதற்காக இரவு நேர உணவை பெண்கள் அரை நிர்வாணகோலத்துடன் பரிமாறினார். ஆனால் இந்த செயற்பாடு நகர சட்டத்திற்கு எதிராக அமைந்துள்ளதாக அதிகாரிகள் அறிவித்ததால் இந்த திட்டத்தை அப்பெண்களால் தொடர்ந்து முன்னெடுக்க முடியாமல் போயுள்ளது.
மொன்ட்ரீயல் நகரிலுள்ள 'பிரின்சஸ் டி ஹோசெலகா' எனும் ஹோட்டலில் பணியாற்றும் பெண் வெயிற்றர்கள் இடுப்புக்கு மேல் ஆடையணியாமல் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறி வந்தனர்.
இந்த ஹோட்டலில் வியாபாரமானது மிகவும் சிறப்பாக காணப்பட்டது. ஏனெனில் அமெரிக்கா, ஒன்டாரியோ (கனேடிய மாகாணம்) ஆகிய இடங்களிலிருந்து அதிகமானோர் வருகைத்தந்தனர் என இந்த ஹோட்டலின் ஊழியரான கிம் மேர்னார்ட் தெரிவித்தார்.
கடந்த 11 வருடங்களாக இச்சேவை மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால், இவ் ஹோட்டல் இவ்வாறு பொது இடத்தில் அரைநிர்வாண சேவை நடத்த அனுமதி பெற்றிருக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த உணவு உணவு விடுதி மொன்ட்ரீயல் ஒலிம்பிக் அரங்கிற்கு அருகிலிருப்பதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 'இந்த ஊழியர்கள் அவர்களது அங்கங்கள் தெரியும் படி இடுப்பைச் சுற்றி சிறிய துணித் துண்டை சுற்றியிருப்பர்' என அதிகாரி ஒருவர் விமர்சித்துள்ளார்.
குறித்த ஹோட்டலானது கடந்த 7 வருடங்களாக இது தொடர்பான சட்ட பிரச்சினையை எதிர்கொண்டு வந்தது.
தற்போது அந்த ஹோட்டலில் பணிபுரியம் பெண் வெயிற்றர்கள் குட்டைப் பாவாடையும், ஜக்கெட்டும் அணிகின்றனர். இந்த மாற்றத்தின்பின் வியாபாரம் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Mussamil Wednesday, 04 January 2012 08:55 PM
உலகம் ரொம்ப மோசமா போய்ட்டு பாருங்கோ
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
2 hours ago
4 hours ago