Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2011 டிசெம்பர் 29 , மு.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
ருமேனியாவில் முற்றிலும் பனிக்கட்டிகளைக் கொண்டு ஹோட்டலொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
தளபாடங்கள் மற்றும் பளிச்சிடும் வெள்ளை சுவர்கள் அனைத்துமே பனிக்கட்டிகளைக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளன.
இங்கு கட்டில்களும் கூட பனிக் கட்டிகளினால் உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உண்மையில் இங்கு வருபவர்கள் தனித்துவம் வாய்ந்த வசதிகளுடன் பொழுதுகளை கழிக்க முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ் உல்லாச ஹோட்டலானது 2005 இலிருந்து ஒவ்வொரு வருடமும் பனிக்காலத்தில் மீள்நிர்மாணம் செய்யப்பட்டுகின்றது. பொதுவாக 10-14 அறைகளைக் கொண்டதாக இந்த ஹோட்டல் அமைந்திருக்கும்.
பெகராஸ் மலையில் 2034 மீற்றர் உயரத்தில், இயற்கையான பொருட்களைக் கொண்டு இந்த ஹோட்டல் உருவாக்கப்படுகின்றது. உள்ளூர் கலைஞர்கள் பாரிய பனிப்பாறையைக் குடைந்து இதை நிர்மாணித்துள்ளனர்.
ஆனால் இவ் ஹோட்டலிற்கு வருவது அவ்வளவு சுலபமானதல்ல. பாதைகளில் பனிப் படரந்து காணப்படுவதால் விமான நிலையத்திலிருந்து கேபிள் காரொன்றினால் தான் வாடிக்கையாளர்கள் அவர்களை அழைத்துச் செல்லப்படுவர்.
இந்த ஹோட்டலுக்குள் வெப்பநிலை- 4 பாகை செல்சியாஸாக இருக்கும். பானங்கள் எல்லாம் பனிக்கட்டியாகவே இருக்கும் என்பதால் தனியாக 'ஐஸ்' சேர்த்துக்கொள்ள வேண்டியதில்லை.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago