2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

அந்தரங்க உரையாடலை இணையத்தில் ஒளிபரப்பி சங்கடத்துக்குள்ளான தகவல்தொழில்நுட்ப நிபுணர்

Kogilavani   / 2011 டிசெம்பர் 25 , பி.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

தகவல் தொழில்நுட்ப நிபுணரான ஊடகவியலாளர் ஒருவர் தனது மேலதிகாரியும் காதலியுமான பெண்ணுடன் மேற்கொண்ட அந்தரங்க உரையாடலை தவறுதலாக இணையத்தளத்தில் இணைய தொலைக்காட்சியில் ஒளிபரப்பி சங்கடத்துக்குள்ளான சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.

லியோ லெபாரட்டின் என்பவர் அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட தகவல் தொழில்நுட்ப நிபுணராவார். இவர் இணையத்தளம் மூலம் தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளையும் நடத்தி வருகிறார்.

அண்மையில், கூகிள் நிறுவனத்தினதால் தயாரிக்கப்பட்ட புதிய மென்பொருட்கள் தொடர்பான விவரண நிகழ்ச்சியொன்றை அவர் இணையத்தளத்தில் ஒளிபரப்பினார். வீடியோவொன்றுக்கு இடையில் தனது முகம் மற்றும் கணினி திரையிலிருந்து எடுக்கப்பட்ட படங்கள் என்பவற்றையும் அவர் காண்பித்துக்கொண்டிருந்தார்.

அவற்றில் திடீரென லியோ லெபார்ட்டின் அந்தரங்க தகவலொன்றும் ஒளிபரப்பாகிவிட்டது. லியோவின் நிறுவன மேலதிகாரியும் அவரின் காதலியான லிஸா கென்ஸெல்லுடன் நடத்திய மின்னஞ்சல் உரையாடல் அது.

 'நான் நிர்வாணமாக படுக்கையில் இருக்கிறேன்.  நான் உனக்காக காத்திருக்கிறேன், கதவு திறந்துள்ளது' என அதில் லியோ கூறியுள்ளார். சில மணித்தியாலங்களின்பின்  அதற்கு அப் பெண் 'நான் உன்னை காதலிக்கின்றேன்' என்று பதிலளித்துள்ளார்.
மேற்படி  நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்த லட்சக்ணக்கான  நேயர்கள் மேற்படி அந்தரங்க உரையாடலையும் பார்வையிட்டனர்.

தகவல்தொழில்நுட்ப நிபுணரான லியோ தகவல்தொழில்நுட்ப நிகழ்ச்சியொன்றின்மூலம் தனது அந்தரங்க வாழ்க்கை விடயங்களை அம்பலப்படுத்தி சங்கடத்துக்குள்ளாக நேர்ந்தமை விசித்திரமானது.

ஆனால் அண்மையில் இந்த உரையாடல் இணையத்தளத்தில் பதிவாகியதால்  அவர் தனது நிலையை தவறிவிட்டதாகவும் அவரது வாழக்கைக் குறித்த விடயங்களுக்கு பொதுமக்களுக்கு தெரியவருவது விருப்பமில்லையென்றும் வலைத்தளமமொன்றில் எழுதியுள்ளார்.

லியோ லெப்பர்ட் ஏற்கெனவே ஜெனிபர் எனும் பெண்ணை திருமணம் செய்து இரு பிள்ளைகளுக்குத் தந்தையாகவுள்ளார். தற்போது லியோவும் ஜெனிபரும் பிரிந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
 


You May Also Like

  Comments - 0

  • PUTTALA MANITHAN Monday, 26 December 2011 07:03 AM

    இப்படி இலங்கையில் நடந்தால் அந்த ஊடகவியலாளருக்கு இந்நேரம் என்னே வாகி இருக்கும்? கொஞ்சம் யோசித்துப்பாருங்கள் நண்பர்களே

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .