Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2011 நவம்பர் 19 , மு.ப. 11:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெண்கள் மீதான பாலியல் வல்லுறவு குறித்து நகைச்சுவையாக பிரித்தானிய பல்கலைக்கழக பத்திரிகையில் எழுதி வந்த இரு பல்கலைக்கழக மாணவர்கள் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர்.
லண்டன் பொருளியல் பாடசாலை எனும் இப்பல்கலைக்கழகத்தின் பீவர் எனும் பத்திரிகையில் 'துயர்தீர்க்கும் மாமாக்கள்;' என்ற பத்தியின்கீழ் பெண்கள் எதிர்நோக்கும் பாலியல் வன்முறைகள் தொடர்பான விடயங்களை தொடர்ச்சியாக இம்மாணவர்ள் எழுதி வந்துள்ளனர்.
கடந்த நவம்பர் முதல்வாரத்தில் வெளியான பத்தியில், தனது காதலியின் விசுவாசம் குறித்து சந்தேகம் கொண்டுள்ள ஆண்களுக்கு ஆலோசனை வழங்கும் முகமாக ஒரு கொடூரமான பாலியல் தாக்குதலினூடாக அவளை அடிபணிய வைப்;பது குறித்து யோசனை தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த பத்தி அப்பத்திரிகையின் அச்சுப் பதிப்பிலும் இணையப்பதிப்பிலும் வெளிவந்தபின், உலகில் முன்னிலை பல்கலைக்கழகங்களில் ஒன்றான இப்பல்கலைக்கழத்தில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.
குறிப்பாக, இந்த பத்தியை வெளியிட்டமைக்காக பத்திரிகையின் நிறைவேற்று ஆசிரியர் நிகோலா அலக்ஸாண்டர் ராஜினாமா செய்யவேண்டுமென வலியுறுத்தி பல்லைக்கழகத்தின் பெண்கள் சமூகம் மற்றும் பெண்ணியலாளர்கள் ஒன்றிணைந்து மனுவொன்றை அனுப்பியுள்ளனர்.
இவர்களின் ஆவேசமான கோபம் காரணமாக மேற்படி பத்திரிகையானது அம்மாணவர்களின் பாதுகாப்புக் காரணங்களுக்காக அவர்களின் பெயர்களை வெளியிட மறுத்துள்ளது. குறித்த மாணவர்கள் மீது ஒழுக்கவியல் நடவடிக்கை மேற்கொள்ளாமை குறித்து இப்பல்கலைக்கழகம் விமர்சிக்கப்பட்டுள்ளது.
ummpa Monday, 21 November 2011 07:08 PM
உங்களை எங்கோ அனுப்புவதோ புரியவில்லை. நீங்கள்தான் சொல்லுவினோம் நாகரிகத்தில் உயர்ந்தவர்கள் என்று. அதக்குள் எதையும் எழுத யாருக்கும் சுதந்திரம் இருக்கு என்று மார்தட்டிக்கொள்ளும் நீங்கள் இப்போது ராஜினாமா பன்னசொல்லுகிரிர்கள் என்ன நியாயம்? எவர்கள் இஸ்லாத்தை பற்றி எழுதி இருந்தால் அல்லது படம் வரைந்து இருந்தால் தனிப்பட்டவர்களின் எழுத்து சுதந்திரம் ! நினைக்கவே பயமாக இருக்கிறது ?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago