2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

நிர்வாணக்கோலத்துடன் கடலில் தத்தளித்த நபர் பொலிஸாரினால் மீட்பு

Kogilavani   / 2011 நவம்பர் 15 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மது அருந்திய நிலையில் கடலில் நிர்வாணக்கோலத்துடன் தத்தளித்துக்கொண்டிருந்த நபரை கடற் பாதுகாப்பு படையினர் கைது செய்த சம்பவமொன்று டோர்ஸட் நாட்டின், பூலே துறைமுகப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கடற்படையினர் பூலே நகர பகுதியினூடாக ரோந்து நடவடிக்கையில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த நிலையில் மேற்படி நபர் நிர்வாணக் கோலத்துடன் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த தகவலை அறிந்துள்ளனர்.

உடனடியாக அவர்கள் உயிர்காப்பு படகை பயன்படுத்தி மேற்படி நபரை காப்பாற்றியுள்ளனர். அந்நபரை மீட்பதற்காக அண்மிக்கும்போத அந்நபர் நிர்வாணக்கோலத்துடன் இருந்துள்ளார்.

மது அருந்திவிட்டு முறைதவறி நடந்த குற்றத்திற்காக மேற்படி நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மது அருந்திவிட்டு கடலில் நிர்வாணமாக குளித்த இச்சம்பவமானது முதற்தடவையாக நடந்தது இல்லை.

இதேபோன்று மற்றுமொரு சம்பவமானது  மெக்ஸிகோவின் புளோரிடா கடற்கரையில் இடம்பெற்றுள்ளது. மது அருந்திய நபரொருவர் கடற்சறுக்கலில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த நிலையில் கடலில் மூழ்கியுள்ளார். பின் அவர் தெய்வாதீனமாக உயிர் தப்பியதுடன் மீண்டும் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுப்பட வேண்டாமென பொலிஸாரினால் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதேப்போன்று சீனாவை சேர்ந்த யோன் பேன் என்ற நபர் மது அருந்திய நிலையில் இரவு நேரத்தில் வீதியில் சென்றுக்கொண்டிருந்த போது கழிவுக்குழாயில் வீழ்ந்துள்ளதுடன் அவரை பலர் இணைந்து காப்பாற்றியுள்ளனர்.

32 வயதுடைய மேற்படி நபர் நீரில் நன்கு தோய்ந்த நிலையில் அவருக்கு பலர் அடுப்பை மூட்டி வெப்பத்தை ஏற்படுத்திக்கொடுத்துள்ளனர். இரண்டு மணித்தியாலங்களின் பின்பே அவர் தனது பழைய நிலைக்கு திரும்பபியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .