Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Super User / 2011 ஒக்டோபர் 28 , பி.ப. 06:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
வீதிகளின் சாக்கடை வாயில்களில் பொருத்தப்படும் மூடிகளுக்கு ஆசிர்வாதம் கோரி விசேட பூஜையொன்று போலந்தில் நடத்தப்பட்டுள்ளது.
இரும்புத் திருடர்களால் இச்சாக்கடை மூடிகள் திருடப்படாமல் இருக்க வேண்டுமென்பதற்காகவே இப்பூஜை நடத்தப்பட்டது.
போலந்தின் லோட்ஸ் நகரத்திலுள்ள 4000 சாக்கடை மூடிகளுக்குப் பதிலாக புதிய மூடிகளை பொருத்துவதற்கு அம்மாநகர சபை உறுப்பினர்கள் தீர்மானித்தனர். அதேவேளை இம்மூடிகள் வீதிகளில் பொருத்தப்படுவதற்குமுன், அவை திருடப்படாமல் இருக்க வேண்டுமென்பதற்காக தேவாலயத்தில் பூஜை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.
இந்நகரத்தின் சுத்திகரிப்பு பிரிவுத் தலைவர் வுலோட்ஸ்மீர்ஸ் டோமஸ்வ்ஸ்கி இதுதொடர்பாக கூறுகையில், 'லோட்ஸ் நகரின் புனித காப்பாளராக சென் பௌஸ்டினா விளங்குகிறார். அவர் வீதியில் சென்று ஏழைகளுக்கு உதவியவர். இந்த சாக்கடை மூடிகளை ஆசிர்வதிக்கச் செய்வதன் மூலம் அவரின் அருளை நகர வீதிகள் எங்கும் பரப்புகிறோம்' என்றார்.
ஆனால் ஒரு மாதத்தின் பின்னர் திருடர்களால் ஒரு மூடிதானும் விட்டுவைக்கப்படுமா என்பது சந்தேகம் என லோட்ஸ் நகரவாசிகள் சிலர் தெரிவித்தாக போலந்து ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
meenavan Saturday, 29 October 2011 05:06 PM
விவஸ்த்தை அற்ற உலகத்தில் எவற்றுக்கு பூஜை செய்வதென்றே தெரியவில்லை? பூஜை செய்யபட்டாலும் மூடிகள் திருடர்களிடமிருந்து தப்புமா என்றும் சந்தேகம்? இந்நிலையில் பூஜைக்கான செலவும் விரயம் தானே? நம் நாட்டை போல அதிலும் கமிசன் பெறுபவர்கள் உள்ளனரோ?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
9 hours ago