Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2011 ஒக்டோபர் 24 , மு.ப. 11:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவில் அருகருகே உள்ள இரு பாடசாலைகளை சேர்ந்த கீழ்வயது மாணவ மாணவிகள் பகிரங்கமாக பாலியல் உறவில் ஈடுபட்ட காட்சிகள் ஒளிப்பதிவு செய்யப்பட்டு இணையத்தளங்களில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஒரு வீடியோவில் 14 வயதிற்குட்பட்ட ஜோடியொன்று, பால்டிமோர் பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றின் மைதானத்தில் வைத்து பாலியல் நடத்தையில் ஈடுபடும் காட்சி பதிவாகியுள்ளது.
மற்றொரு வீடியோவில் அருகிலுள்ள பாடசாலையொன்றின் கேட்போர் கூடத்தில், அருகே வகுப்பு நடைபெறும் வேளையில் மாணவர்கள் பாலியல் நடத்தையில் ஈடுபடும் காட்சி பதிவாகியுள்ளது.
இச்சம்பங்கள் தொடர்பாக இப்பாடசாலைகளின் நிர்வாகங்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.
பேஸ்புக், டுவிட்டர் மற்றும் யூ ரியூப் ஆகிய இணையத்தளங்கள் மேற்படி காட்சிகளடங்கிய வீடீயோக்களை முறைப்பாடுகளின் பின்னர் தற்போது அகற்றியுள்ளன.
பால்டிமோர் பிரட்ரிக் டக்ளஸ் உயர் பாடசாலையைச் சேர்ந்த 14 வயதான மேற்படி மாணவியின் தந்தை இது குறித்து பொலிஸில் முறையிடுகையில் 'அவள் இப்பாலியல் நடத்தையில் ஈடுபட பலவந்தப்படுத்தப்பட்டுள்ளாள்' எனத் தெரிவித்துள்ளார்.
அந்தக் காட்சியானது வீடியோவாக பதிவு செய்யப்படுவதை தனது மகள் உணர்திருக்கவில்லையெனவும் இந்த வீடியோவை பதிவு செய்தவர் சிறையிலடைக்கப்படுவாரென தான் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேற்குறிப்பிட்ட மாணவி தற்போது வேறொரு பாடசாலைக்கு மாற்றப்பட்டுள்ளாள்.
இந்த வீடீயோவானது சிறுவர் பாலியல் தொடர்பானதாக இருப்பினும் சில இணையத்தளங்களில் நான்கு நாட்கள் காட்சிப்படுத்தப்பட்டமை குறித்து அம்மாணவியின் தந்தை விசனம் தெரிவித்துள்ளார்.
'அதனை மில்லியன் கணக்கிலான மக்கள் பார்வையிட்டுள்ளனர். அது உண்மையில் அவளது நற்பெயருக்கு மாத்திரமல்ல அவளது குடும்பத்தினர் உட்பட பெரும் எண்ணிக்கையிலானோரை காயப்படுத்தியிருக்கும்' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மற்றொரு வீடியோவானது மில்போர்ட் மில் அகடமி எனும் பாடசாலையில் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 15 - 17 வயதான மாணவர்கள் மூவர் அப்பாடசாலையின் பிரதான மண்டபத்தில் பாலியல் நடத்தையில் ஈடுபடும் காட்சி அதில் பதிவாகியுள்ளது.
நெறி தவறிய நடவடிக்கையில் ஈடுபட்டதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவ்விரு சம்பவங்கள் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ram Tuesday, 25 October 2011 12:15 AM
வீடியோ பண்ணினாலும், பன்னாவிட்டாலும் தவறு தவறுதான்.
Reply : 0 0
sana Tuesday, 25 October 2011 04:05 AM
உலகத்தை சீர்கேடுகளில் காப்பாற்ற இஸ்லாமிய சட்டங்கள் மிக அவசரமும் அவசியமுமாக அமுல்படுத்த பட வேண்டியது தடுக்க முடியாத ஒன்றாக இருக்கின்றது.
Reply : 0 0
kumar Tuesday, 25 October 2011 04:53 PM
இஸ்லாமிய சட்டம் இன்றைய தேவை.
Reply : 0 0
alilanka Tuesday, 25 October 2011 05:31 PM
பெற்றோர்களா உங்கள் பிள்ளைகள் மேல் கவனமாக இருங்கள் விழிப்புடன் இருங்கள்.
Reply : 0 0
மௌனி Tuesday, 25 October 2011 05:47 PM
சரியாகச் சொன்னிர்கள் சனா. மேற்கின் மனங்களில் படிந்து போயிருக்கும் கலாச்சார அழுக்குகளை நீக்க இஸ்லாம் ஒன்றே தீர்வு. பாலியலே வாழ்க்கை என்று நினைக்கும் அவர்களின் மன நிலையில் மாற்றம் நிகழ வேண்டும். அவர்களின் ஆன்மீக வறுமைக்கான தீனி இஸ்லாத்திடம் முழுமையாகவே இருக்கிறது. அதனை வாழ்வியலாகக் கொள்ளும்போதே இப்படியான இழி செயல்களிலிருந்தும்,பிறழ்வு நடத்தைகளிலிருந்தும் விடுபட முடியும்.
Reply : 0 0
xlntgson Tuesday, 25 October 2011 09:19 PM
சிறுவர் என்பது எப்போது?
எல்லா வசதிகளையும் செய்து கொடுத்து விட்டு காரியங்கள் கை விட்டுப் போகும் போது முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர்.
Reply : 0 0
mtmsiyath Wednesday, 26 October 2011 01:06 AM
இது மேற்குலகின் நல்ல செயல் என்பது அவர்களின் கருத்தாகும்.
Reply : 0 0
MSA.Majeed Thursday, 27 October 2011 06:47 PM
உலகத்திலுள்ள அத்தனை பிரச்சினைகளுக்குமான தீர்வு இஸ்லாத்தில் மாத்திரமே இருக்கிறது.
குறிப்பாக இஸ்லாம் காட்டும் ஒழுக்கவியலலையும், குற்றவியலையும் முதலில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
இறைவன் எல்லோரையும் நல்ல வழியில் நடப்பதற்கு உதவி செய்வானாக பிரார்த்தனையுடன்.
-மதி-
Reply : 0 0
ganeshamoorthy Thursday, 03 November 2011 06:40 PM
எந்த ஒரு மதமும் இப்படி சீரழியும் படி கூறவில்லை.
அவனவன் தனது மதத்தை சரியாகப் பின்பற்றினாலே போதும்.
Reply : 0 0
m.i.m.musadique Friday, 04 November 2011 03:54 PM
"மேற்குலகம் உலகத்தை கண்டுள்ளது; ஆனால் மதத்தைக் கண்டுகொள்ளவில்லை..........." என்று யாரோ எப்போதோ
ஒருவர் கூறியது இதுவரை பொய்யாகவில்லை. கிழக்குலக மக்களான நாம் இது சம்பந்தமாக அலட்டிக் கொள்வானேன்?
ஒருவர் கூறியது இதுவரை பொய்யாகவில்லை. கிழக்குலக மக்களான நாம் இது சம்ப...')">Reply : 0 0
sudha Tuesday, 08 November 2011 02:58 PM
எல்லா இடங்களிலும் இத்தகைய தவறுகள் நடக்கின்றன. இது செய்தியாக இருப்பதால் பிரசித்தி பெறுகிறது. சிந்தித்து பாருங்கள் உங்களில் , உங்கள் நண்பர்களில், உங்கள் ஊரில் எத்தனை பேர் இருக்கிறார்கள்? சிந்திங்கள். இவை அனைத்தும் காலத்தின் கட்டாயம். .........ஒருவன் தவறு செய்தல் அவனாக எழவேண்டும். அப்போதுதான் தவறுகள் நிறுத்தப்படும். சிந்தித்து பாருங்கள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
31 minute ago
57 minute ago
1 hours ago