2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

உலக சாதனை உள்ளாடை ஓட்டத்திற்கு எதிர்பாராத சறுக்கல்

Super User   / 2011 செப்டெம்பர் 27 , பி.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அமெரிக்காவின் உட்டா மாநிலத்தின் இறுக்கமான சில சட்டங்களுக்கு தெரிவிக்கும் முகமாக மக்கள் உள்ளாடைகளுடன் ஓடும் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

சுமார் 5000 ஆண்களும் பெண்களும் இந்த ஓட்டத்தில் பங்குபற்றியதாகவும் இது ஒரு புதிய உலக சாதனையாகும் எனவும் ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால் கின்னஸ் உலக சாதனை விதிகளின்படி இந்நிகழ்வு இடம்பெறாததால் அது புதிய சாதனையாக பதிவுசெய்யப்பட வாய்ப்பில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி ஓட்டத்தில் சுமார் 5000 பேர் உள்ளாடைகள், நீச்சல் உடைகள், நைட்டிகள் முதலானவற்றுடன் சோல்ட்லேக் சிற்றி நகரில் ஓடினர்.

ஆனால் கின்னஸ் விதிகளின்படி ஆண்கள் உள்ளாடையுடன் ஷேர்ட் அணிந்திருக்கக்கூடாது. அதேவேளை பெண்கள் உள்ளாடையுடன் ஷேர்ட் அணிந்திருப்பது அவசியமாகும். அத்துடன் நிகழ்வில் பங்குபற்றுபவர்கள் ஹோர்ன் ஒன்று அடிக்கப்பட்டவுடன் 5 நிமிட நேரம் ஒரே இடத்தில் இருக்கவேண்டும்.

இந்த விதிகள் பின்பற்றப்படாததால் அதிக எண்ணிக்கையானோர் இந்நிகழ்வில் பங்குபற்றிய போதிலும் அது உலக சாதனையாக பதிவுசெய்யப்படாது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்குமுன் 550 பேர் உள்ளாடைகளுடன் ஒரேஇடத்தில் தோன்றியமையே கின்னஸ் உலக சாதனையாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.

ஆனால் பெண்கள் ஷேர்ட் இல்லாமல் தோன்ற அனுமதிப்பதற்கேற்ப விதிகளை மாற்றுவதற்கு கின்னஸ் அதிகாரிகள் மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

மேற்படி நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளரான நேட் போர்ட்டர் இது தொடர்பாக கூறுகையில், "கின்னஸ் அதிகாரிகளுக்கு நாம் கூற முற்படுவது என்னவென்றால் அமெரிக்காவில் மக்களிடம் உள்ளாடைகளுடன் வரவேண்டுமென்று கூறினால் பெண்கள் மேலே பிரா மட்டும்தான் அணிந்திருப்பார்கள். ஷேர்ட் அணிய மாட்டார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

"ஆனால் இந்நிகழ்வு மாநிலத்தின் அரசியல் சட்டங்கள் சிலவற்றின் மீதான அதிருப்தியை வெளிப்படுத்துவதற்காக செய்யப்பட்டது. அந்த வகையில் இது பாரிய வெற்றியாகும்" எனவும் அவர் கூறினார்.
 


You May Also Like

  Comments - 0

  • KLM Wednesday, 28 September 2011 07:42 PM

    நல்ல போராட்டம்தான் போங்க

    Reply : 0       0

    xlntgson Wednesday, 28 September 2011 08:44 PM

    ஏன் இங்கே விவசாயிகள் girdle கோவணப் போராட்டம் நடத்தவில்லையா?
    கொஞ்சம் வித்தியாசம், அவ்வளவுதான்! பாராளுமன்றத்துக்குள்ளே கூட loincloth கோவணம் அணிந்து வந்தவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர் தங்களது எதிர்ப்பைக் காட்ட.

    Reply : 0       0

    reemco Wednesday, 28 September 2011 09:04 PM

    அன்றாட வாழ்க்கைக்கு முக்கியமான போட்டி. அனைவரும் முயற்சிக்கவும் மக்களே.

    Reply : 0       0

    nousath Thursday, 29 September 2011 03:48 PM

    இது இப்ப அவசியம் தான்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .