2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

வெற்றுப் போத்தலில் குறுஞ்செய்தி எழுதியவரை கண்டறிய உதவுமாறுகூறி ஊடகங்களை நாடிய பெண்

Kogilavani   / 2011 செப்டெம்பர் 07 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கடலில் மிதந்து வந்த போத்தலொன்றில் இருந்த குறுஞ்செய்தியை அவதானித்து, அந்த குறுஞ்செய்தியை எழுதிய நபரை கண்டுபிடித்துத்தருமாறு ஊடகங்களிடம் பெண்ணொருவர் கேட்டுகொண்ட சம்பவமொன்று போலந்தில் இடம்பெற்றுள்ளது.

அலெக்சான்டர் ஜெனிகா (வயது 25) என்ற பெண்ணின் கைகளிலே குறித்த வெற்றுப் போத்தலில் உள்ளடக்கப்பட்ட குறுஞ்செய்தி கிடைக்கப்பெற்றுள்ளது. இவர் விடுமுறையை கொண்டாடுவதற்காக   போலந்தின்  பிரேசானா கடற்கரைக்குச் சென்றுள்ளார்.

இதன்போது, கடலில் மிதந்து வந்த வெற்றுப் போத்திலினுள்ளே  போலென கையொப்பமிட்டு, இக்கடிதம் யார் கைகளில் கிடைக்கின்றதோ அவர் என்னைப்போல தனியாளாக இருப்பாரென நான் ஆச்சர்யப்படுகின்றேன் என எழுதியுள்ளார்.

காதல் எவ்வாறு இருக்க முடியும் என்பதையும் அதை இழப்பது எவ்வளவு கொடுமையானது என்பதையும் அறிந்துள்ளேன் என அப் பெண் தெரிவித்துள்ளார்.

தற்போது ஜெனிகா போலந்தைச் சேர்ந்த ஊடகங்களிடம் தொடர்பு  கொண்டு குறித்த நபரை கண்டறிவதற்கு உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் குறித்த நபர் தன்னுடைய காதலராக இருக்க முடியுமென நம்பிக்கை கொண்டுள்ளார்.

நான் அந்த மனிதரை சந்தித்தால் அந்நபர் மீது காதல் கொள்வேன்.  என்னால் இவையனைத்தும் நடக்குமா என்பது குறித்து சிந்திக்க முடியவில்லையென அப்பெண் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0

  • suthakaran Thursday, 08 September 2011 05:22 PM

    பாவம் அந்த பெண் பார்த்து கொடுங்க.

    Reply : 0       0

    Aslam Thursday, 08 September 2011 08:53 PM

    நாந்தான் அது. கட்டார்ல இருக்கேன். வாடி வா.

    Reply : 0       0

    klm Thursday, 08 September 2011 11:17 PM

    பல வருடம் பழகியவனே எப்படிப்பட்டவன் என்று கண்டுபிடிப்பது கடினம். போத்தல் குறிப்பெழுதி கடல்ல (யாருக்கோ) போட்ட யாரையோ எப்படி நம்புவது?

    Reply : 0       0

    ROSHAN Friday, 09 September 2011 05:32 AM

    அஸ்லம் அது நீங்க இல்லங்க அது நானுங்க . அங்க தான் நானும் இருக்கேன் ..சும்மா தண்ணி அடித்து விட்டு ஏதோ பேப்பரில் எழுதி போத்தலில் அடைத்து போட்டேன் இவள் யன்னடாண்டா ?????????

    Reply : 0       0

    xlntgson Friday, 09 September 2011 09:50 PM

    "இல்லாத பொருள் மீது எல்லோர்க்கும் ஆசை வரும், இக்கரைக்கு அக்கரை பச்சை என்றும் அக்கரைக்கு இக்கரை பச்சை!"

    இதை தெய்வீகக் காதல் என்று தான் சொல்ல வேண்டும், நிகழ்ந்தால்!
    bottle போத்தல் விடு தூது, அன்னம் எங்கே போயிற்று?


    இதை தெய்வீகக் காதல் என்று தான் சொல்ல வேண்டும், நிகழ்ந்...')">Reply :
    0       0

    faroos Monday, 12 September 2011 07:06 PM

    எங்கிருந்தாலும் காதல் வாழ்க, இறைவன் நாடியது போல் நடக்கும்,நம்பி நில், உன் காதல் கை கூடட்டும் வாழ்க வழமுடன்.

    Reply : 0       0

    Mohammed Riyas Thursday, 22 September 2011 12:51 AM

    காதலுக்கு ஒரு ஒ podu

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .