Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2011 ஓகஸ்ட் 25 , பி.ப. 02:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவைச் சேர்ந்த நபரொருவர் தனது அனுமதியின்றி ஆணுறுப்பை துண்டித்துவிட்டதாக குற்றம் சுமத்தி, சத்திரசிகிச்சை நிபுணர் ஒருவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
லொறி சாரதியாக பணியாற்றும் 64 வயதான பிலிப் சீட்டன் எனும் இந்நபர், 2007 ஆம் ஆண்டு, அழற்சியொன்றின் காரணமாக, கென்டக்கி மாநில வைத்தியசாலையொன்றில் விருத்த சேதன சத்திரசிகிச்சை செய்துகொள்ள சம்மதித்தார்.
ஆனால் சத்திரசிகிச்சையின்போது, சீட்டனின் ஆணுறுப்பில் ஆபத்தான புற்றுநோய் ஏற்பட்டமைக்கான அறிகுறிகள் இருப்பதை மருத்துவர் ஜோன் பெட்டர்ஸன் கண்டறிந்துள்ளார். எனவே சீட்டனின் உயிரை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக சீட்டனின் ஆணுறுப்பில் ஒரு அங்குலத்தை நீக்கியதாக மருத்துவர் பெட்டர்ஸன் தெரிவித்துள்ளார்.
சீட்டனின் உறுப்பில் ஒரு அங்குலத்தை மாத்திரமே தான் நீக்கியதாகவும் எஞ்சிய பகுதி மற்றொரு மருத்துவரால் நீக்கப்பட்டுள்ளதாகவும் டாக்டர் பெட்டர்ஸன் மேலும் தெரிவித்துள்ளார்.
இதுக் குறித்து சீட்டன் நீதிமன்றில் தெரிவிக்கையில், 'நான் சத்திரசிகிச்சை முடிந்து பார்க்கும் போது எதையும் காணவில்லை. பிறகு நான் எனது கழிவறைக்குச் சென்று திரும்பி வந்தபோது. இந்த வைத்தியசாலையால் நான் நரகத்திற்கு தள்ளப்பட்டேன் என்று' கூறினேன் எனத் தெரிவித்துள்ளார்.
சீட்டனும் அவரது மனைவியும் 'சேவை, காதல், பாசம் என்பன இழக்கப்பட்டால்| மருத்துவருக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளனர்.
திருமதி சீட்டன் நீதிமன்றத்தில் இது தொடர்பாக கூறுகையில், மருத்துவர் பெட்டர்ஸன் தன்னிடம் ஆலோசனை எதுவும் கேட்காமல் இச்சத்திரசிகிச்சையை செய்ததாக கூறினார். அவரிடம் இது தொடர்பாக கேட்டிருக்க வேண்டும்' என்றார்.
இதற்கு டாக்டர் பீட்டர்ஸன் பதிலளிக்கையில், நோயாளியின் மனைவியிடம் அனுமதி கேட்பது புத்திசாலித்தனமானது என தான் எண்ணவில்லை என்றார்.
இவ்வழக்கு தொடர்ந்து நடைபெறுகிறது.
Nesan Friday, 26 August 2011 06:33 PM
நோயாளியின் உயிர் முக்கியமென மருத்துவர் எண்ணியிருப்பார். ஆனால் நோயாளிக்கு.....?
Reply : 0 0
xlntgson Friday, 26 August 2011 09:49 PM
விருத்த சேதனத்துக்கு எதிரானவர்கள் கவனத்துக்கு: இவர்கள் சிறு வயதிலேயே பெற்றோருக்கு அதைச் செய்து விட இயலாது என்கின்றனர். இங்கோ புற்று நோய் வந்தது அவனுக்கும் தெரியாது, அறுவைசிகிச்சை மேடைக்கு கொண்டுவரும் வரை மருத்துவருக்கும் தெரியாது! எச்சரிக்கை முற்கூட்டிய கவனம் நல்ல பாதுகாப்பு, நோய் வந்து சிகிச்சை செய்வதைவிட!
ஒருகோடிக்கு ஒன்று பால் விகாரமாக பிறந்து விடுகிறது. அப்போதும் மருத்துவர் பால் மாற்று சிகிச்சையை குழந்தையாக இருக்கும் போதே செய்துவிடுங்கள் அது தான் எளிது என்கின்றனர்!
வயது வந்த பின் ஆணா பெண்ணா?
Reply : 0 0
xlntgson Saturday, 27 August 2011 09:13 PM
பிழை திருத்தம்:
ஒரு கோடிக்கு ஆயிரம் பிள்ளைகள் ஆணா பெண்ணா என்று உறுதிப்படுத்த முடியாத நிலையில் பிறக்கின்றன என்று வாசிக்கவும்.
phimosis எனப்படும் இந்த வகையிலான நுனித்தோல் நோய் துப்புரவாக இருப்பதன் மூலம் ஏற்படாது எனப்படுகிறது ஆனால் துப்புரவே பிரச்சினை சிறுநீர் கழிக்கும் போது விசிறல் சிதறல் ஏற்படுவதும் நீர்ப் பஞ்சமான இடங்களில், காலங்களில் சரிவர துப்புரவு செய்யாமையினால் வெண் படிமங்களினால் இந்த நோய் சிக்கலடைந்து பின் மருத்துவர் விருத்த சேதனம் செய்ய கோருவர், செய்யாது விடின் பெண்களுக்கு கர்ப்பபுற்று!
Reply : 0 0
Dilshad Muhammed Thursday, 01 September 2011 08:36 AM
நன்றி xlntgson. நீங்கள் கூறியிருப்பது மிகச்சரியான செய்தியே. உலக அறிவாளிகள், ஆராய்ச்சியாளர்கள் என்று கூறிக்கொள்ளும் அமெரிக்கர்களுக்கு இந்த விடயம் இப்போது தான் தெரியும். ஆனால் முஸ்லிம்களுக்கு இந்த விடயத்தை 1400 ஆண்டுகளுக்கு முன்னரே முஹம்மத் நபியவர்கள் கற்றுக்கொடுத்து விட்டார்கள். யாவரும் இஸ்லாத்தை படித்து விளங்குவார்கள் என்றால் இஸ்லாமும் மக்களும் ஆரோக்கியமாக இருப்பார்கள்.
Reply : 0 0
xlntgson Thursday, 01 September 2011 10:00 PM
abraham, இப்ராகிம் நபியின் வழிமுறை இது, அரபுக் கலாச்சாரம் மட்டுமல்ல hebron யூதர்கள் கிறிஸ்தவர்கள் கூட அவர்களைப் பின்பற்ற வேண்டும், இது முஸ்லிம்களின் ஓர் அவசியமில்லாத சடங்கு என்று இவர்கள் கூறுவதில் பொருளில்லை. இதை நான் யாஹூ போன்ற பிரபல்யமான இணையங்களில் வெளியிட்ட போது வெட்டி விட்டனர்- முக்கியமாக் தண்ணீர்ப் பிரச்சினை துப்புரவு இரண்டையும்!
அவர்கள் இதை சுய இன்பம் & நீலப் படங்களோடு இணைத்தும் குழந்தைகளின் உரிமையைக் காட்டியும் குழப்புகின்றனர்.
கைக்குழந்தைகளுக்கு செய்யக் கூடாது என்றாலும் 6 வயதானதும் நலம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
10 minute ago
35 minute ago