2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

பாலியல் பொம்மைகளுடன் நீச்சல் போட்டி

Kogilavani   / 2011 ஓகஸ்ட் 15 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ரஷ்யாவில் நடைபெற்ற, மிதக்கும் பாலியல் பொம்மைகள் சகிதம் நீந்தும் நீச்சல் போட்டியொன்றில் 800 இற்கும் மேற்பட்டவர்கள் பங்குபற்றியுள்ளனர்.

ரஷ்யாவின் சென்ட் பீடடர்பர்க் நகரிலிருந்து 50 மைல்கள் தொலைவிலுள்ள வுவோக்ஸா நதியில் இப்போட்டி நடைபெற்றது. 3 நிமிட நேரம் கொண்ட போட்டி இது.

வருடாந்த 'பபிள்  பபா சவால் சுற்றுப்போட்டி' என  மேற்படி நீச்சல் போட்டிக்கு பெயரிடப்பட்டிருந்தது.

விருந்தொன்றின்போது ஒரு ஜோக்காகத்தான் இவ்வருடாந்த போட்டி ஆரம்பமாகியதாக  இப்போட்டியின் ஒழுங்கமைப்பாளரும் ஸ்தாபகருமான திமித்ரி புலவினோவ் தெரிவித்துள்ளார்.

'ஆண்கள் மது அருந்திய நிலையில் பெண்கள் வராமல் இருந்தார்கள்.  அப்போது சுற்றுலா பயணங்களின்போது செக்ஸ் பொம்மைகளுடன் போகலாம் என ஒருவர் ஆலோசனை கூறினார். அப்போது 'அவை நல்ல மிதக்கும் உபகரணங்களாக பயன்படும்' என மற்றொருவர் கூறினார்' என்கிறார் புலவினோவ்.

இப்போட்டியில் பெரும் எண்ணிக்கையான ஆண்கள் ஆர்வத்துடன் பங்குபற்றினர். சொற்ப எண்ணிக்கையான பெண்களும் பங்குபற்றினர்.

'பெண்கள் மிதக்கும் ஆண் பாலியல் பொம்மைகளை எடுத்துவர வேண்டுமென கோரப்பட்டிருந்தனர். ஆண் பொம்மைகளின் விலை அதிகம் அவற்றை எம்மால் வழங்க முடியவில்லை' எனவும்  புலவினோவ் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0

  • asker Tuesday, 16 August 2011 06:55 PM

    இன்னொரு சுனாமி வந்தாலும் ஆச்சரியம் இல்லை. ........

    Reply : 0       0

    samrana Saturday, 20 August 2011 11:59 AM

    வரும் ஆனா............... இப்ப வராது

    Reply : 0       0

    riyas Saturday, 20 August 2011 09:10 PM

    எது வந்தாலும் மக்கள் பயப்பட மாட்டார்கள்.

    Reply : 0       0

    vaan mohi Sunday, 21 August 2011 12:23 PM

    அணுகாமல் இருப்பது மிக்க மேல்.

    Reply : 0       0

    rizana Monday, 22 August 2011 03:51 PM

    சுனாமி வந்து என்ன செய்யப்போகிறது? இதெல்லாம் சகஜம் தானே!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .